நாளைய சமுதாயத்தின் தூணாக இருப்பவர்கள் இன்றைய இளைஞர்கள்

நாளைய சமுதாயத்தின் தூணாக இருப்பவர்கள் இன்றைய இளைஞர்கள். அவர்களை செம்மைப்படுத்துவதன் மூலம் மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்க முடியும்.

இளைஞர் மேம்பாடு என்பது இரண்டு முக்கிய இலக்குகளை மையமாகக் கொண்டது. ஆக்கப்பூர்வமாக சமூக செயல்பாடுகளில் ஈடுபட செய்வது முதல் இலக்கு என்று கூறலாம். இதற்காக சுயக்கட்டுப்பாடு, பொறுப்பேற்று செயல்படுதல், சரியாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல், பிறருடன் இணைந்து செயல்படுதல் போன்ற பண்புகளை இளைஞர்களிடம் கொண்டுவர வேண்டும்.

தன்னம்பிக்கை தொடர் - அனுபவமே ஆசான்

இத்தொடரை எழுத தொடங்கும் முன்னர், எனக்கு கிடைத்த அனுபவங்களை பட்டியலிட்டு பார்க்கிறேன், என்னை சீர் திருத்தி கொள்ள இன்னுமொரு வாய்ப்பு கொடுத்த என்னுடைய மடைமைக்கு வந்தனங்கள்.

ஆனால் அவற்றையெல்லாம் இங்கே பட்டியலிடமுடியாதே. சொல்ல வந்த விசயங்களை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். அதற்கு வேறொரு கணத்தில், மற்றுமோர் களத்தில் விரிவாக பேசலாம்.

நம்மை நாமே சரி செய்து கொள்ள நமக்கு கிடைக்கும் அனுபவமே மூலதனம். எவராயினும் தன்னை திருத்தி கொள்ளவே விரும்புவர். அப்படி தங்களை மாற்றி கொள்ள உதவும் மிகப் பெரிய பொக்கிஷமே அவர்களின் அனுபவமேயன்றி வேறில்லை.

Pages