6 மாதம் முதல் 1 வயது வரை அளிக்க வேண்டிய பயிற்சிகள்

குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு.

6 மாதங்களுக்கு பிறகு 11 மணி மற்றும் மலை 3 மணி ஆகிய நேரங்களில் நன்கு வேகவைத்து மசித்த காய்கறிகளை ஒரு வேளையும், பழங்களை ஒரு வேளையும் கொடுக்கலாம்.

9வது மாதம் முதல் காலையில் இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை நெய் சேர்த்து கொடுத்துப் பழகலாம்.

10வது மாதம் முதல் காலை டிபன் கொடுப்பதோடு மதியம் கொந்தம் சாதம் குழைத்து பருப்பு, நெய் ஆகியவற்றைக் கலந்து கொடுத்துப் பழக்க வேண்டும்.

11வது மாதம் முதல் காலை உணவுக்கு முன் கஞ்சி கொடுக்கலாம்.

முதல் முறை:- உடைத்த கடலை மாவை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குழந்தையின் ருசிக்கேற்ப உப்பு (அ) சர்க்கரை (அ) வெள்ளம் கலந்து கொடுக்கலாம்.

2வது முறை:- கோதுமை, ராகி, மக்காச்சோளம், உடைத்தகடலை,முந்திரி, கேழ்வரகு ஆகியவற்றை சம அளவு எடுத்து அவற்றில் உடைதக்கடலை தவிர்த்து மீதியை வறுத்து எல்லாவற்றையும் அரைத்து மாவு தயாரித்து அதில் நீர் கலந்து கொதிக்க வைத்து கஞ்சி தயாரித்துக் கொடுக்கலாம். இதிலும் மேற்சொன்னவாரே குழந்தையின் ருசிக்கேற்ப உப்பு (அ) சர்க்கரை (அ) வெல்லம் கலந்து கொடுக்கலாம்.

மேற்ச சொன்ன இரண்டு முறைகளிலும் பால் கலந்தும் கொடுக்கலாம். சர்க்கரையை விட வெள்ளம் கலந்து கொடுப்பது மிகவும் நல்லது. ஏனெனில் வெள்ளத்தில் இரும்புச் (iron) சத்து அதிகம் உள்ளது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.

குறிப்பு:- கஞ்சியை முதன் முதலில் குழந்தைக்கு அறிமுகப்படுத்தும்போது வெயில் காலமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் கஞ்சி குளிர்ச்சியைத் தரும். இதனால் குளிர்காலத்தில் அறிமுகப்படுத்தும்போது சளி பிடிக்கலாம்.

12வது மாதம் முதல் எல்லாவித உணவையும், காய்கறிகளையும் கொஞ்சம் நன்கு வேகவைத்து அறிமுகப்படுத்தவும்.

குழந்தைகளுக்கு  உணவளிக்கும் போது கவனித்தில் கொள்ள வேண்டியவை:-

புதிதாக அறிமுகப்படுத்தும்போதுமுதலில் அறிமுகப்படுத்திய உணவிற்கும் அடுத்து நாம் அறிமுகப்படுத்தும் உணவிற்கும் கண்டிப்பாக இடைவெளி தேவை. அப்போது தான் எந்த உணவு குழந்தைக்கு ஒத்துகொள்ளவில்லை என்று நாம் அறிய முடியும். அந்த உணவை தவிர்த்து மற்றவற்றை கொடுக்க வேண்டும். சிறுது  திரும்பவும் அதே உணவை முயற்சிப்பதில் தவறு இல்லை..

 

அடிக்கடி வயிற்ருப்போக்கு ஏற்பட்டால்:

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலோ அல்லது அஜீரணக் கோளாறு ஏற்பட்டாலோ நாம் அறிமுகப்படுத்திய புதிய உணவு குழந்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை என அறியலாம். மேலும் தரையில் இருந்து ஏதாவது பொருளை வாய்க்குள் போட்டுக்கொண்டாலும் வயிறு உபாதை ஏற்படலாம்.

குழந்தை குறைந்தது 5 முதல் 7 தடவைகள் மலம் கழிக்கணுலாம். அதற்கு மேல் மலம் கழித்தால் அருகில் உள்ள மருத்துவரை அகவும்.

மேலும் அவசர சிகிச்சியாக உடனே நாம் தினமும் அளித்துவரும் உணவை நிறுத்திவிட்டு பார்லி கஞ்சி (அ) நொய் கஞ்சி கொடுக்கவும்.

நொய் கஞ்சி:- சிறிது பச்சரிசி நொய் அல்லது அரிசியை  ஒரு அகலப் பாத்திரத்தில் அதிக தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். இந்த அதிகத் தண்ணீரை தண்ணீருக்கு பதில் குழந்தைக்கு கொடுத்து வரவும. கஞ்சியை உணவுக்கு பதில் கொடுக்கவும். வயிற்றுப் போக்கு ஓரிரு நாட்களில் உடனே சரியாகி விடும். அவ்வாறு சரியாகாத பட்ச்சத்தில் மருத்துவரை அணுகுவது நலம்.

 

அடிக்கடி சளித் தொல்லை ஏற்பட்டால்:

குப்பைமேனி தழை, கற்பூரவள்ளி தழை, முருங்கை இல்லை, துளசி இல்லை, சிறிது இஞ்சி இதில் அனைத்துமே அல்லது எந்த தழை கிடைக்கிறதோ அந்த தழைகளை கையின் உள்ளங்கையில் எடுத்துகொண்டு, அதனுடன் சிறுது கல் உப்பு சேர்த்து பிழிந்தால் சாரு கிடைக்கும். இந்தச் சாற்றுடன் சிறிது தேன் கலந்து ஒரு நால்லைக்கு 3 வேலை கொடுத்துவர கண்டிப்பாக சளிதொல்லையில் இருந்து விடுபடலாம்.தேன் சூட்டைத் தணிக்கும். கண்டிப்பாக தேன் கலந்து கொடுக்கவும்.

6 மாதங்களுக்குப் பிறகு பற்கள் முளைக்கதொடங்கும். அப்போது, வாயில் இருந்து அதிகமான அளவு எச்சில் வெளிவரும். தண்ணீர், பால் கொடுக்கும் போதும், வாயில் அதிகமாக எச்சில் சொட்ட ஆரம் பிக்கும். துணிகள் ஈரமாக இருந்தால் அடிக்கடி மாற்ற வேண்டும். பற்கள் முளைப்பதன் அறிகுறி தென்பட்டாலே, குழந்தை வலியால் அடிக்கடி அழத் தொடங்கும். குழந்தை நல மருத்துவரை அணுகி, குழந்தைக்கு ஏற்ற வலி நிவாரணி மருந்தைக் கொடுக்கலாம். பற்கள் முளைக்கும்போது ஈறுகளில் அரிப்பு, வலி, எரிச்சல் இருக்கும். பால் குடிப்பதைக்கூட குழந்தை மறுக்கும். சில நேரங்களில் வயிற் றுப்போக்கு ஏற்படலாம்.

6 மாதங்களுக்குப் பிறகு நீங்கள் பேசுவதோடு உலக அறிவையும் புகட்டுங்கள். இவை எவ்வாறு என்று யோசிக்க வேண்டாம். நாம்  நம்மை சுற்றியுள்ள பொருள்களின் பெயர்களை சொல்லிக்கொண்டே நாம் நம் வேலையை தொடரலாம். எந்த ஒரு செயலையும் செய்ய ஒரு வழிகாட்டுதல் இருந்தால் அவை நமக்கு மிக எளிதாக மாறிவிடும். அதனால் இவற்றை நாங்கள் ஒரு சின்ன எடுத்துக்காட்டின் மூலம் கீழே கூறியுள்ளோம் . இவை குழந்தையின் ஆர்வத்தை தூண்டி நுட்ப்ப அறிவை -ஐ அதிகரித்து சீக்கிரம் பேச உதவுவதுடன், குழந்தை நல்ல அறிவாளியாக, கூர்மையான புத்திசாலியாக, ஞாபகசக்தி அதிகம் உள்ளவர்களாக மாறுவதை நீங்கள் கண் கூடாக காணலாம்.

7-வது மாதம் – எந்த உறுதுணையும் இல்லாமலே குழந்தை உட்காரப் பழகிக்கொள்ளும். உடலின் எடையில் ஒரு பகுதியைக் கால்களில் தாங்கியபடி நின்று, தானே நேராக
நிற்கப் பழகும்.

8 – 9 மாதங்களில், நன்றாகவே உட்காரும். கால்களில் மொத்த எடையையும் தாங்கிக்கொள்ளப் பழகும். எதைக் கொடுத்தாலும், அதைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளும். சின்னச் சின்னப் பொருட்களை ஒன்றாகச் சேர்க்கவும், அடுக்கவும் கற்றுக்கொள்ளும். பத்தாம் மாதம், நன்றாகத் தவழ்ந்துபோய் எல்லாப் பொருட்களையும் எடுக்கஆரம்பிக்கும். எதையாவது பிடித்தபடி ஓர் இடத்தில் இருந்து, இன்னோர் இடத்துக்கு நகரும். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டக் கற்றுக்கொள்ளும்.
.
11 – 12 மாதம் – உட்கார்ந்த நிலையில் திரும்பவும், நன்றாக முழங்கால் களை ஊன்றித் தவழவும் முடியும். நேராக நிற்கும். தரையில் எதையாவது எழுதுகிற மாதிரி செய்யும். ஒரு கையில் மட்டும் பிடிமானம் இருந்தாலும், நேராக நிற்கப் பழகும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை உபயோகித்துப் பொருட்களை எடுக்கக்கற்றுக்கொள்ளும்.

இது போல் இன்னும் பல விழயங்களை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எவ்வாறு கற்றுக் கொடுப்பது , கற்றுக் கொடுக்கும்போது கவனத்தில் வைக்க வேண்டியவை எவை எவை என்பது பற்றியும், அறிய இந்த வலைதளத்தினை தொடர்ந்து படிக்கவும்.