40 சதவித ரூபாய் நோட்டுகளை கிராமபுரதிற்கு அனுப்புங்கள் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்.

500, 1000  பணமதிப்பிழப்பு  நடவடிக்கைக்கு பின் நகரங்களைப் போல கிராமபுரங்களும் பாதிக்கப்பட்டது ஆனால் புதிய ரூபாய் நோட்டுகள் வழங்க நகரங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்  கிராமபுரங்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதை கவனத்தில்கொண்டு கிராம புறங்களில் ஏழைகள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அங்கு 40 சதவித ரூபாய் நோட்டுகளை வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அதில். நவம்பர் 22, மற்றும் டிசம்பர் 02 தேதிகளில் வெளியான சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி கிராம புறங்களுக்கு தேவையான அளவு பணம் வங்கிகள் வழங்கவில்லை என்பதை கவனத்தில் கொண்டு, சில நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. என்றும்

கடுமையான நிலையை எதிர்க்கொண்ட கிராம புறங்களில் ஏழைகள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அங்கு 40 சதவித ரூபாய் நோட்டுகளை வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.

கிராம புறங்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக பொதுதுறை, தனியார், மற்றும் கூட்டுறவு வங்கிகள் தங்களுடைய ஏடிஎம்களில் புதிய ரூபாய் நோட்டுகளை வைக்க கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மக்கள் சில்லரை பெறுவதில் சிரமத்தினை எதிர்க்கொள்ள கூடாது என்பதற்காக 500, 100 ரூபாய் நோட்டுகளை வைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி வங்கிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் தேவையின் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளை வழங்க வேண்டும் என்றும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.