3 - 5 வயது வரையுள்ள குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

இந்த வயதில் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து இருப்பார்கள். இதற்கு முன் play School-க்கு சென்று இருந்தாலும், கட்டுப்பாடு, கண்டிப்புகள் நிறைந்த விளையாட்டு தவிர்ர்த்து படிக்கவும் ஆரம்பிக்கும்  வயது இது தான். இது வரை தன தாயின் கையால் உணவருந்திய குழந்தைகள் தானே உண்ண வேண்டிய  சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். இதனால் தாங்கள் எதையோ இழப்பது போன்ற எண்ணுகிறார்கள். மேலும் தாமே   உண்ண  ஆரம்பிப்பதால் நிதானமாகாவும்  உண்பதால் பல நேரங்களில் மதிய உணவு உண்ணாமலேயே பள்ளியில் இருந்து திரும்புவார்கள். இதை சரி செய்ய அவர்களுக்கு பிடித்த மாதிர்யும், அதே சமயத்தில் சத்துள்ளதாகவும் கொடுக்க சில டிப்ஸ் கொடுத்துள்ளேன். முயற்சி செய்து பார்க்கவும்.

பின்னாளில் பல receipies இடம் பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

TIPS:-

  இந்த வயதில் கலர் கலராய் இருந்தால் ரொம்ப பிடிக்கும்.
 
கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது அனைத்திலும் சிறிது சிறிதோ எடுத்து mixi-யில் மைய அரைத்து இட்லு மாவில் கலந்து தோசை வார்த்து கொடுக்கவும். பச்சை கலர் தோசை அழகாகவும், மொரு மொருவென்றும் 2-க்கு 3 அல்லது 4 தோசைகளை குழந்தைகள் கேட்டு உண்பார்கள்.

    இதைப் போலவே கேரட் கலந்தால் ஆரஞ்ச்சு(Orange)  கலர், பீட்ரூட் சேர்த்தால் பர்புள்(Purple) கலர் என்று தங்கள் குழந்தைகளின் tiffan box களைகட்டுமே!

    இதே போல் கலர் கலர் காய்கறிகளில் அவர்களுக்கு ஏற்றார் போல் காரம் சேர்த்து பொரியல் செய்து சாதத்தில் கலந்தால் கலர் கலர் சாதம் ரெடி.

    குழந்தைக்கு Maagi ரொம்ப பிடிக்கும் என்றால் அதில் உள்ள மசாலாவை தவிர்த்து அதற்க்கு பதில் கலர் கலரை காய்கறிகள் கலந்து மாகி செய்து கொடுக்கலாம். குழந்தைக்கு பிடித்த மாதிரியும் ஆயிற்று. சத்தான உணவாகவும் ஆகிவிட்டது.

    இது போல் பல காய்கறிகள் கலந்து உப்புமா செய்து கொடுக்கலாம்.

    குழந்தைக்கு பிரட் பிடிக்கும் எனில் பிரட் - ஐ நெய் அல்லது வெண்ணையில் ரோஸ்ட் செய்து பின்னர் மேலே வெண்ணை தடவி கொடுத்தால், பிரடை நேரம் கழித்து உண்ணாலும் மிருதுவாக இருக்கும். இதை ஸ்நாக்ஸ்-ஆக கொடுக்கலாம்.

    இதே போல் சப்பாத்தி செய்து கொடுத்தாலும் சூடாக இருக்கும் போதே வெண்ணையை மேலே தடவினால் மதியம் குழந்தைகள் சாப்பிடும் வரை சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

    மதிய வேலை Tiffan கொடுத்தால் காலையில் குழந்தைகளுக்கு ஏதாவது காய் கலந்து சாதம் ஊட்டி அனுப்பலாம். அல்லது பருப்பு சாதத்துடன் கை கலந்து நாமே ஊட்டி விடலாம். இது மதியம் குழந்தை சரியாக உணவருந்தவில்லை என்றாலும் தேவையான சத்து காலை உணவிலேயே கிடைத்து விடுவதால் சீக்கிரம் சோர்ந்து போகாமல் குழந்தையை பார்த்துக்கொள்ள உதவும்.

    மேலும் வாரம் ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையோ குலோப்ஜாமுன் அல்லது பால்கோவா போன்ற கொலஸ்ட்ரால் நிறைந்த உணவை குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு தேவையான கொலஸ்ட்ரால் இழபீட்டை சரிசெய்யலாம்.  இதற்காக அடிகடி கொடுப்பது தேவையற்ற கொழுப்பு சத்தை அதிகரித்து விடும். அளவாக இருந்தால் எதுவும் நன்றே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே என்பதை நினைவில் கொள்ளவும்.

இந்தப் பருவம் பள்ளி செல்லும் பருவம். குழந்தைகள் அழகாக பள்ளி சீருடைகள் அணிந்து அ , ஆ , இ ஈ எனவும் A, B , C  D  எனவும் 1, 2, 3, 4 எனவும் பயிலும் நேரம். நம் வீட்டுச்  சூழ்நிலையை தவிர பிற குழந்தைகள், மனிதர்கள் என்று பலருடனும் பழகும் வாய்ப்பு கிடைக்கும் காலம். இந்தப் பருவத்தில் தான் குழந்தைகள் விட்டு கொடுக்கும் பழக்கம் மட்டுமல்லாமல் தன்னிடம் அன்பு மட்டுமே காட்டுபவர்களை தாண்டி மற்ற மனிதர்களிடம் பழக தெரிந்துகொள்ளும் காலம். அவர்களைப்  பொறுத்த மட்டில் அவர்கள் புது உலகத்திற்குள் அடி எடுத்து வைப்பதை  போல உணரும் காலம். பெற்றோரான நாம் தான் தினமும் அவர்களுக்கு இந்த வித்தியாசத்தை மெதுவாக எடுத்துக்கூறி இந்த உலகத்தை அறிமுகப் படுத்தவேண்டும். 

தான் கேட்டது அனைத்தும் கிடைக்கிற ஓர் குழந்தைக்கு பள்ளியில் கேட்டது கிடைக்காததோடு புதிதாக இதை செய், இதை செய்யாதே, இங்கு நிற்காதே என்பது போன்ற கட்டளைகளும் கேட்கிறபோது மிரண்டு போகிறான். இதனால் தான் பள்ளிக்கு செல்ல மறுப்பும் சொல்வார்கள் குழந்தைகள். உடனே பள்ளிக்கு போய்  தான் ஆக வேண்டும் என்று அவர்களை திட்டி அடித்து அனுப்பும் பெற்றோர் பலரை நாம் காண்கிறோம். இதனால் குழந்தைக்கு மேலும் பயம் அதிகரிப்பதோடு படிப்பு என்பதும் குழந்தையை பயமுறுத்தும்.

 

இதை தவிர்க்க பெற்றோர் தினமும் குழந்தையுடன் ஒரு அறை மணி நேரமாவது செலவிட்டு குழந்தை பள்ளிக்கு சென்றது முதல் திரும்பி வந்தது வரை என்ன நடந்தது என்பதை கேட்டறிந்து அவர்களுக்கு தைரியம் அளிப்பதோடு அவனுக்கு மற்றவர் ஏன் (அது அவர்களுடைய ஆசிரியையாக கூட இருக்கலாம்) அவர்களிடம் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை விளக்கினால் அவர்களும் புரிந்துகொண்டு சந்தோழமாக பள்ளிக்கு செல்வதோடு, படிப்பிலும் ஆர்வம் காட்டுவர்.  இதனால் நம்  பிள்ளை பள்ளியில் முதல் மாணவனாகவோ, மாணவியாகவோ கூட திகழலாம்.