2017 புத்தாண்டு ராசிபலன் - விருச்சகம்

(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உங்கள் ராசிக்கு சிறப்பாக இருக்கும், ஆண்டின் தொடக்கமே குருவின் அருளோடு தான் பிறக்கிறது. ஜனவரி 16-க்குப்பின் 12-ஆம் இடமான துலாம் ராசிக்கு அதிசாரமாக செல்வதால் சுமாரான பலனே கிடைக்கும். மேலும் தற்சமயம் ராகு 10-ஆம் இடத்தில் இருந்து கொண்டு மனைவிமூலம் பிரச்சனையையும் கேது 4-ஆம் இடமான கும்பத்தில் இருந்து உடல்நலகுறைவும் கொடுக்கலாம்.  கவலைபடாதீர்கள் எல்லாம் சிறிது காலம் தான். மார்ச் 10 முதல் ஆகஸ்ட் 31 வரை குருபகவன் வக்ராமடைகிறார் அந்த காலகட்டத்தில்   உங்கள் காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே நிறைவடையும். அதிலும் ஜூலை 26-க்கு பிறகு ராகு 9-ஆம் இடமான கடகத்திற்கும் கேது 3-ஆம் இடமான மகரதிற்கும் மாறுகின்றனர். அப்பொழுது உங்கள் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக  விலகும். பிரிந்து சென்றவர்களும் மறுபடியும் உங்களிடம் வந்து சேர்வார்கள். தற்போது சனி உங்கள் ராசியில் இருப்பதால் உறவினர்களோடு கருத்துவேறுபாடுகள் தோன்ற வாய்ப்புள்ளது எனவே நண்பர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் பக்குவமாக நடந்து விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சனியினுடைய 3-ஆம் இடத்துப் பார்வை உங்கள் உங்கள் உங்கள் தொழிலில்  முழுகவனம் செலுத்தி செயல்கள் அனைத்தும் வெற்றியுடன் முடிய உறுதுணையாக இருக்கும். உழைபிற்கேற்ற பலனை அடைவீர்கள், உங்கள் உழைப்பு வீண் போகாது. சில சமயங்களில் குழப்பமான மனநிலை உருவாகும் குழப்பங்களையும் சஞ்சலங்களையும் தவிர்க்க ஆன்மிகத்திலும் தெய்வ காரியங்களிலும் ஈடுபாடுகொள்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் கூடும்

நாள்பட்ட  வியாதிகள் முழுவதுமாகத் தீர்ந்து விடும். சீரான வருமானம் இருக்கும். உங்கள் ராசியை பொறுத்தவரை  குழந்தைகளின்  வளர்ச்சியும் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே இருக்கும். இருந்தாலும் அவரவர் ராசிப்படி அது மாறுபடும்.  உங்களுக்கு இது ஏழரை சனி என்பதால் புதியமுயற்சி எதையும் மேற்கொள்ள வேண்டாம். குடும்பத்திலும் சுபச் நிகழ்சிகளை  தகுந்த முறையில் திட்டமிட்டு முடிக்க முயற்சி செய்யவும். வீடு-மனை போன்ற சொத்துக்களை வாங்கும் முயற்சிகளையும் இப்போதைக்கு செய்ய வேண்டாம்.
செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் உற்றார் உறவினர்கள் வகையில் பிரச்னைகள் ஏற்படகூடும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். நல்ல நெறிமுறைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பணியாளர்களுக்கு ஆண்டின் ஆரம்பம் சற்று மந்தமாக இருந்தாலும் மார்ச்சிக்குப் பிறகு சிறப்பாக மாறும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.   உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக முடிக்க முயற்சி செய்யுங்கள். . சக ஊழியர்களை ஒத்துழைப்பு போதிய அளவு கிடைக்காமல் போகலாம். மார்ச் வரை பணியாற்றும் நேரத்தில் பொறுமை தேவை. சொந்தபந்தங்களின் சுபநிகழ்சிகளுக்கு போகமுடியாமல் போகலாம். மார்ச்சிக்குப் பின் அனைத்தும்  மாறும்.

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு மார்ச் 10 வரை சற்று கடினமாக இருக்கும். அதுவரை ஏதாவது சிறு சிறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். கவனம் செலுத்தி வியாபாரம் செய்தால் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும். முக்கியமான பரிவர்த்தனைகளில் உங்கள் நேரடி மேற்பார்வையில் நடப்பது நல்லது. தொழிலாளிகள் ஒத்துழைப்பு கொடுப்பர். தொழில் பங்குதாரரை கலந்தாலோசித்த அவர்களுடைய ஒப்புதலோடு முடிவுகளை எடுங்கள். மார்ச்சிக்குப் பிறகு  வெற்றிகள் தாமதமாக வரும்.

விவசாயிகள் உடலாரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கால்நடை பராமரிப்புகளுக்காக செலவுகள் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மக்களுக்காக சேவை செய்யகூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் செயல்பாடுகளுக்கு கட்சித் தலைமையின் ஆதரவு கிடைக்கும். மக்களின் பாராட்டுகளும் கிடைக்கும். பதவிகள் கிடைப்பது சற்று அரிதானா விஷயமாகும்.

கலைத்துறையினர்.  கலைத்துறையினருக்கு மார்சிக்குப் பின் பணவரவு சற்று நன்றாக இருக்கும், இருந்தாலும் புது வாய்ப்புகளுக்கு அதிக முயற்சி செய்யவேண்டும்.  இடத்தை தக்கவைத்துக்கொள்ள  கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தற்போது சனி உங்கள் ராசியில் இருப்பதால் உறவினர்களோடு கருத்துவேறுபாடுகள் தோன்ற வாய்ப்புள்ளது தங்கள் வார்த்தைகளை நன்கு யோசித்து  பேசவேண்டிய ஆண்டாகும். வாக்கு வாதத்தில் ஈடுபடாமல்  விட்டுகொடுத்து போவது நல்லது. வேலைக்கு போகும் பெண்களுக்கு இது நல்ல ஆண்டாகவே அமையும். பிள்ளைகள் பெருமை தேடி தருவர்.

மாணவமணிகள் மார்ச் வரை மார்ச் வரை கடினமாக உழைக்கவேண்டி இருக்கும். சோம்பேறித்தனத்தை விட்டொழித்து சுறுசுறுப்பாக படித்தால் இறுதி தேர்வில் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களை பெறுவர். மார்ச்சிக்குப் பிறகு சிறப்பாக இருக்கும். போட்டிகளில் பங்கேற்று  சாதனை செய்வீர்கள். பெற்றோர், ஆசிரியரின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: விநாயகப்பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபடுங்கள். தவிர வியாழன் தோறும் தச்சனமூர்தியை வழிபாட்டு வாருங்கள்.  துர்க்கையையும், பரவரையும் ராகுகாலதில் சென்று வழிபடுங்கள்.