2017 புத்தாண்டு ராசிபலன் - ரிஷபம்

(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் முடிய)

ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த 2017 ஆம் ஆண்டு மாற்றங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும். வருட தொடக்கத்தில் சிறுசிறு கேது 10-ஆம் இடமான கும்பத்தில் இருப்பதால் உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஆனால் அனைத்தும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் விலகும். பிறகு படிப்படியாக ஏற்றம் காண்பீர்கள் ஆகஸ்ட் மாதம் வரை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உறவினர்களோடு சில கருத்துவேறுபாடு ஏற்படலாம். ஜூலை 26 வரைசற்று கடினமாக இருக்கும் அதற்குப் பிறகு ராகு 3-ஆம் இடமான  கடகத்திற்கு மாறும்போது உங்கள் ராசிக்கு பொருளாதார நிலை உயரும். விரக்தி மனப்பான்மை விலகி தெளிவு பிறக்கும். இலக்குகளை நிர்ணயித்துக் அதை நோக்கி முன்னேறும் ஆற்றல் பெறுவீர்கள்.

ஜூலை 26 வரை தொழில்முடக்கம் இருக்கும் அதற்குப்பின் அகன்று  எதிர்பாராத வாய்ப்புகளையும் பெறுவீர்கள் உங்கள் தொழில் வளரத்தொடங்கும். தொழில் சம்பந்தமாக பல இடங்களுக்கும் பயணப்பட வேண்டியிருக்கும். அது தொழிலை மேலும் மேம்படுத்தும். தொழில் போட்டி குறையும். மார்ச் முதல் அகஸ்ட் வரை சிறப்பான காலமாக இருக்கும். கஷ்டகாலத்தில் நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும் பணவரவில் தடைகளோ பொருளாதாரத்தில் கஷ்டங்களோ ஏற்படாது. பணம் பெற்றவரிடம் குறித்த நேரத்தில் திருப்பி கொடுப்பீர்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறும். நீட நாள் நடந்த வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.

குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். உங்கள் குழந்தைகள் உங்கள் பெருமைபடவைப்பார்கள், அவர்கள் வெளிநாடு படிப்பிற்காக உங்களை பிரிந்து செல்ல நேரிடும்.

.ரிஷப ராசி அன்பர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலம் சற்று கடினமாக இருக்கும். எப்போதும் ஒருவித மனக்கலக்கம் இருந்துகொண்டிருக்கும். செயல்களை முடிக்க சற்று கடினமாக உழையுங்கள் நேரிடும். இந்த காலகட்டத்தில் உடன்பிறந்தோர் ஒத்துழைப்பு இருக்காது எனவே அவர்களால் பூர்வீகச் சொத்து கிடைப்பதில் சிக்கல் இருக்கும். யாருக்கும் இந்தகாலத்தில் வாக்கு கொடுக்காதீர்கள்.

பணிபுரிவோருக்கு வருட தொடக்கத்தில் வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். யாரிடமும் பொறுப்புகளை நம்பி ஒப்படைக்காதீர்கள். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை வேலைப்பளு குறைந்திருக்கும். அதிகாரிகளின் ஆதரவால் சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். இந்த சமயத்தில் வியாபாரிகளுக்கும் சிறப்பாக இருக்கும்.

ஜீலை 26-க்கு பிறகு விவசாயிகளுக்கு கரும்பு, பயிறு, எள் மகசூல் பெருகி லாபம் பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பில் லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு 2017. ஆரம்பத்தில் மந்தமாக இருக்கும் அவப்பெயர் உண்டாகும் காரியங்களில் தளி இருங்கள். இருந்தாலும் மார்ச்க்கு பிறகு மற்றம் வரும் பணவரவில் பிரச்னை இருக்காது.

கலைத்துறையில் ஈடுபடுல்லோருக்கு இவாண்டின் மத்தியல் சிறப்பாக இருக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு இவ்வாண்டு சிறப்பாக இருக்கும். கணவரின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். குழந்தைகள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். உங்களால் உங்கள் நிறுவனத்திற்கு முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்: ராகு காலத்தில் துர்கையை வழிபடுங்கள் . குருபகவானையும் வில்வமாலை கொண்டு தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்யுங்கள். இவை தவிர மாணவர்களின் கல்விக்குத் தேவையான உதவிகள் செயுங்கள் அது உங்களுக்கு கைகொடுக்கும்.