2017 புத்தாண்டு ராசிபலன் - மேஷம்

(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

மேஷம் ராசி கொண்டவரா நீங்கள் இந்த ஆண்டு உங்களுடைய ஆண்டாகப் போகிறது. உங்களது  வெற்றிகளை கொண்டாட தயாராகிக் கொள்ளுங்கள்.

இதுவரை நீங்கள் பெற்ற அனுபவத்தை அறுவடைசெய்யும் ஆண்டாக 2017 அமையப்போகிறது. உங்கள் யூகங்கள் ஒவ்வொன்றும் சரியாக அமையும். அப்புறமென்ன வாய்புகளை எப்படியும்  வருமானங்களாக மாற்றிவிடுவீர்கள்.  இதுவரை நீங்கள் செய்துவந்த தொழிலில் ஏற்பட்ட சறுக்கல்கள் படிகற்களாக மாறி நீங்கள் உயர்ந்து செல்லும் ஆண்டாக அமையப்போகிறது.  

நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் வந்துசேரும்.

உங்களுடைய உதவியாளர்களிடம் அன்புடன் பழகிகொள்ளுங்கள் அவர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள. உங்களின் வெற்றியில் முக்கியமான பங்கற்றப் போகிரவர்கள் அவர்கள் தாம்.

உங்களுக்கு இதுவரை இருந்த அனைத்து போட்டியாளர்களையும் ஓரங்கட்டும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். இனி உங்களுக்கு தடையேதும் இல்லை.

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் செய்வோருக்கு வருமானம் பெருகி லாபம் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்களில் பிரச்னை இல்லாமல் முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் போட்டியிருந்தாலும் அவர்களை சமாளிக்கும் பக்குவம் பெறுவீர்கள்.

உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சி வந்து சேரும். உதவி என உங்களை நாடி வரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் முடிந்த உதவியை செய்யுங்கள், நீங்கள் செய்வீர்கள். மேலும் உறவினர்களால் நன்மைகளும் அடைவீர்கள். இதற்கு முன் உங்களை மதிக்காதவர்கள் கூட உங்களை நாடி வந்து ஆலோசனை கேட்பார். சமூதாயத்தில் உங்கள் மதிப்பு கூடும்.  உங்கள் தொழிலில் நிபுணத்துவம் பெற்றவர்கள் நட்பு உங்களுக்கு கிடைக்கும், அவர்களின் ஆலோசனைகள்  உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். எதிரிகளை கையாளும் விதம் நயமாக இருக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் கூட மீண்டும் கூட வாய்ப்புண்டு.

நடக்காது என்று நினைத்திருந்த செயல்கள் கூட திடீரென்று நடந்தேறும்.

பணிபுரிவோருக்கு இந்த புத்தாண்டில் மேலதிகாரிகளின் பாராட்டுகளும் ஆதரவும், பதவி உயர்வும் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைக்கும். அதை சிறப்பாக பயன்படுத்தி மக்களுக்கு தொண்டாற்றுவீர்கள்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருளோடு புகழும் கிடைக்கும். உங்கள் நிலையில் முனேற்றம் ஏற்படும்.

ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு தாய்வீட்டுச் சீதனம், பூர்வீகச் சொத்து ஆகியவை கிடைக்க வாய்ப்புண்டு. அல்லது நீங்களாகவே வீடு-மனை  வாங்க கூடும்.

 மாணவர்களே உங்கள் முழு திறமையையும் பயன்படுத்துங்கள் உங்கள் உழைப்பு வீண்போகாது. தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

2017-ம் ஆண்டின் இறுதியில் உங்கள் தோற்றதில், நடையில்  பெரும் கம்பீரத்தோடு வெற்றிகளையும் குவிதிருபீர்கள்  .

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்

உங்கள் ரகசியங்களை காப்பாற்றுங்கள்.

நீங்கள் பொருள் ஈட்டும் ஆண்டாக இது அமையபோகிறது எனவே ஈட்டியதை காக்கவும் செய்யுங்கள்.

தொழில் ரீதியாக உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிற்கோ குடும்பத்தை பிரிந்து பயணம் மேற்கொள்ள நேரிடலாம், அதற்கும் தயாராய் இருங்கள்.

எதை தொடங்கினாலும் சரியாக திட்டமிட்டு பின்பு செயலாற்றுங்கள்.

இதற்கு முன்பு சான் ஏறினால் முழம் சருகியிருக்கும் ஆனால் இனி உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெருவீர்கள் எனவே கடின உழைப்பிற்கு தயாராகுங்கள்.

பணவசூலிலும், வழக்குகளிலும் நிதானம் காட்டுங்கள்.

பங்கு சந்தைகளில் ஈடுபடாதீர்கள்.

தினமும் காலையில் யோகா அல்லது ஏதாவது உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்து பழகி வாருங்கள் அது உங்கள் முகத்தில் புதுப்பொலிவை உண்டாக்குவதொடு செயல்திறனையும் கூட்டும்.

உங்கள் நடையிலும்  உடையிலும் சற்று மிடுக்கை கூட்டுங்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அருகிலுள்ள பெருமாள் கோயில்களுக்கு சென்று தரிசித்து வாருங்கள். ஞாயிற்றுக்கிழமை பைரவரை வழிபடுங்கள். இது தவிர துர்கை மற்றும் பத்திரகாளியையும் வழிபடலாம்.