2017 புத்தாண்டு ராசிபலன் - மிதுனம்

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் முடிய)

மிதுனம் ராசி அன்பர்களுக்கு இது நல்ல ஆண்டாகவே அமையும். இந்த 2017 ஆம் ஆண்டின் தொடக்கம் அருமையாக இருக்கும். வீடு மனை கூட வாங்கலாம். குரு உங்களை தூக்கி நிறுத்தும் இடத்தில் உள்ளார் அவரால் நல்ல பலன்கள் உண்டாகும். சுப நிகழ்சிகளும் சிறப்பாக அமையும். மார்ச் மாதத்திற்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் வரை குரு கிடைக்க கூடிய நன்மைகள் குறையும் இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை. இருந்தாலும் நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் உதவி செய்யகூடிய அளவில் இருப்பீர்கள். அவர்களின் உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் எந்த தேக்கமும் இன்றி சிறப்பாக நடக்கும்.

ஜூலை 26 ல் ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு சிறு சிறு சங்கடங்கள் தலை தூக்கும். புதியவர்களின் நட்பில் எச்சரிக்கை தேவை. பூர்வீகச் சொத்துக்களில் பிரச்சனைகள் உண்டாகலாம் எனவே சகோதர சகோதிரிகளுடன் மென்மையாக பழகுங்கள். கணவன் மனைவிக்குள் கருது வேறுபாடுகள் தோன்றும். இக்காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்தல் அவசியம். டிசம்பர் மாதம் வரை புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.  அதற்குப்பின் சிந்தனையில் தெளிவு பிறக்கும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை பயணச் செலவுகள் கூடும். குருவால் கிடைத்தப் பலன்கள் குறையும். தொழில் செய்வோருக்கு வருடத்தொடக்கம் நான்றாக உள்ளதால் இந்த காலகட்டத்தில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரருக்குள் ஒற்றுமை வளரும்.

செப்டம்பர் மாதம் முதல் தொய்வில் மாற்றம் வரும். வருமானம் படிப்படியாக உயரும், உடல்நலம் மேம்படும். திட்டமிட்டு செயல்புரிவீர்கள், வெளிநாட்டினருடன் உள்ள  தொழில் தொடர்பு வளரும். பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளுங்கள். 

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு உழைபிற்கேற்ற  பலன் கிட்டாது. கொடுக்கல் வாங்கல்கள் சுமாராகவே இருந்து வரும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை பங்குதாரருக்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை மிகுந்த ஆண்டாகும். மார்ச் வரை மார்ச் வரை நல்ல போகும் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சற்று கடினமாக இருக்கும். அனைவரையும் அனுசரித்து போக வேண்டியிருக்கும். இருந்தாலும் மேலதிகாரிகளால் சில பிரச்சனைகள் உண்டாகலாம். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்து வந்தால் எந்தப் பிரச்னையும் விலகிபோகும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். ஊதிய உயர்வு தள்ளிப்போகலாம்.

கலைத்துறையினருக்கு சிறப்பாகவே இருக்கும் மார்சிக்குப் பின் பணவரவு சற்று குறையலாம் ஆனால் புது வாய்ப்புகள் கிட்டும்.  வய்ப்புகளை நிதானமான பரிசீலித்து உங்களால் முடியும் என்றால் மட்டும் ஒத்துக்கொள்ளுங்கள் இல்லையேல் வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு ஜூலை வரை நல்ல பதவியும் பெயரும் கிடைக்கும் ஆனால் ஜூலைக்கு பிறகு அதில் மற்றம் இருக்கும்  தொண்டர்களின் ஆதரவும்  முன்போல் இருக்காது. டிசம்பரில் மீண்டும் சிறப்பாக மாறும்.

விவசாயிகளுக்கு ஜூலை 25 வரை சிறப்பாக இருக்கும். அதன் பிறகு செலவுகளைக் குறைத்து கொள்ளவும். கால்நடைகளின் மூலம் சிறிது நன்மைகள் ஏற்படும். புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம். இருக்கிற தொழிலில் அதிக அக்கறை செலுத்துங்கள்.

பெண்மணிகளுக்கு ஆண்டு தொடக்கமும் இறுதியும் சிறப்பாக இருக்கும். இடையில் குடும்ப ஒற்றுமை குறையக் கூடும். கணவருடன் விட்டுகொடுத்து போதல் நன்மை பயக்கும். வீண் வாக்குவாதங்கள் அறவே கூடாது.

மாணவமாணவியர் இந்த கல்வியாண்டின் கடைசியில் தான் சற்று கடினமாக இருக்குமே தவிர சற்று கூடுதல் கவனத்தை செலுத்தி படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு உகந்தது.