2017 புத்தாண்டு ராசிபலன் - துலாம்

(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

துலாம் ராசி அன்பர்களுக்கு உங்கள் ராசிநாதன் சுக்ரனின் சாதகாமான நிலையால் சிறப்பாக தொடங்கும் இவ்வாண்டு உங்கள் வாழ்கையை அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்லும் ஆண்டாகவே அமையும்.  ஜனவரி-16-லிருந்து குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசாரமாக வருவது சிறப்பல்ல என்றாலும் அவருடைய 5,7,9-ஆம் இடத்து பார்வை உங்களுக்கு நன்மைகளை சேர்க்கும்.  மார்ச் 10 முதல் அகஸ்ட் 31 வரை குரு வக்ரம் அடைவதால் அவரால் எந்த நற்பலனும் கிடைக்காது. எனவே மார்ச் மாதத்திற்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் வரை குருவால் கிடைக்க கூடிய நன்மைகள் குறையும்.  அதேசமயம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-இடத்தில் உள்ளார், அவருடைய பத்தாம் இடதுப்பர்வையால் சிரியா சிரமங்களுக்கு பிறகு முயற்சிகள் வெற்றிபெறும். அது உங்களுக்கு அனுபவ பாடமாகவும் அமையும். இருந்தாலும் தொழில் வளர்ச்சியில் தொய்வு ஏற்படாது. டிசம்பர் 18-க்கு பிறகு தனுசு ராசிக்கு மாறவிருப்பதால் அதன் பிறகு உங்களுக்கு அனைத்தும் சாதகமாக அமையும். ராகுவை பொறுத்தவரை தற்போது 11-ஆம் இடமான சிம்மத்தில் இருக்கிறார் அதனால் உங்களுக்கு பெண்கள் மூலமாக நன்மைகள் உண்டாகும். 5-ஆம் இடத்து கேது, பிள்ளைகள் வழியாக பிரச்சனைகளை கொண்டுவருவார் ஆனால் பயப்பட வேண்டியதில்லை. பிள்ளைகளை அவர்கள் வழியிலேயே சென்று திருத்துவீர்கள். நீங்கள் செய்யும் தொழிலில் எந்த தேக்கமும் இன்றி சிறப்பாக நடக்கும். விருச்சகத்தில் இருக்கும் சனி  ஏப்ரல்-10 முதல் ஆகஸ்ட்-6 வரையுள்ள காலகட்டத்தில் வக்ரமடைகிறார் அந்த சமயத்தில் நற்பலன்கள் குறையும்.

ஜூலை 26-ல் ராகு 10-ஆம் இடமான கடகதிற்கும் கேது 4-ஆம் இடமான மகர ராசிக்கும் மாறுகின்றனர். 10-ஆம் இடத்து ராகு இருப்பதும் 4-ஆம் இடத்தில் கேது இருப்பதும்  உடல் நலத்தில் கோளாறு ஏற்படுத்த கூடும்  எனவே அந்த காலகட்டதில் உடல் நலத்தில் அக்கறை தேவை. மருத்துவ செலவு உண்டாகலாம் இந்த காலகட்டத்தில் உங்கள் தொழிலில் நிபுணத்துவம் பெற்றவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும், அவர்களின் ஆலோசனைகள்  உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். பெண்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசுக்கு செலுத்தவேண்டிய வரவுசெலவு கணக்கு, வரி போன்றவற்றை நேரத்திற்கு செலுத்திவிடுவீர்கள், எதிர்கால திட்டங்களுக்கான வேலைகளை ஆரம்பிப்பீர்கள். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும்.

செப்டம்பருக்கு பிறகு டிசம்பர் 18 வரை இந்த ஆண்டின் சிறப்பான காலகட்டமாக இருக்கும். தொழில் செய்வோருக்கு நன்றாக உள்ளதால் இந்த காலகட்டத்தில். வருமானம் உயரும், நல்ல லாபம் ஈட்டுவீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். சமூதாயத்தில் உங்கள் மதிப்பு கூடும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும், சுபகாரியங்களை வெற்றிகரமாக நடத்திமுடிப்பீர். ஆலயத் திருப்பனிக்கு உதவி செய்வீர். பங்குதாரருக்குள் ஒற்றுமை வளரும். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் உங்களுக்கு பணிந்து நடப்பார்கள். உடல்நலம் மேம்படும். தீயோரை இனம் கண்டு விலக்கி வைப்பீர். திட்டமிட்டு செயல்புரிவீர்கள், உற்றார் உறவினருக்கு உதவிகள் செய்வீர். புதிதாக சேமிப்பு கணக்குகளை தொடங்குவீர். புது வீட்டிற்கு மாறக்கூடும். திறமையை காட்ட வாக்குவாதம் வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கொடுக்காதீர்.

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு ஜூலை முதல் ஆகஸ்ட் இறுதி வரைவரை சற்று கடினமாக இருக்கும். ஏதாவது சிறு சிறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். செப்டம்பர் முதல்  நல்ல லாபம் கிடைக்கும் . பங்குதாரருக்களின் ஒத்துழைப்பும், பணியாளர்களின் ஒத்துழைப்பும்  நல்லபடியாக இருக்கும். புதிய முயற்சிகளையும் செய்யலாம், அதற்கு அரசு உதவி பெறுவதில் சிக்கல் இருக்காது. அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். முக்கியமான பரிவர்த்தனைகளில் உங்கள் நேரடி மேற்பார்வையில் நடப்பது நல்லது.

பணியாளர்களுக்கு ஆகஸ்ட் வரை பணிச்சுமை சற்று கடினமாக இருக்கும். அனைவரையும் அனுசரித்து போவீர்கள் என்பதால் உடன் பணிபுரிபவரால் உதவி கிடைத்து பணிச்சுமை சற்று குறையும். இருந்தாலும் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெற கடினமாக உழைக்க வேண்டி வரும். இப்பொழுது நிறுவன மாறுதலுக்கு முயற்சி செய்யாமளிருப்பது நல்லது. எதிர்பார்த்த ஊதிய உயர்வு தள்ளிப்போகலாம். ஆனால் வருமானத்திற்கு குறைவிருக்காது,

கலைத்துறையினருக்கு சுமாராகவே இருக்கும் மார்ச்சிக்குப் பின் பணவரவு சற்று குறையலாம் ஆகஸ்ட் இறுதி வரை சற்று கடினமாகத்தான் இருக்கும். இந்த காலகட்டத்தில் முயற்சியை கைவிடகூடாது. செப்டம்பருக்கு பின் நண்பர்களால் வாய்ப்புகள் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் தங்களுக்கு மேலுள்ள தலைவர்கள் கொடுத்த பொறுப்பை கவனமுடன் எடுத்து செய்யவேண்டும். புதிய பதவிகள் கிடைப்பது சற்று கடினம் தான். பெண்கள் உங்கள் முன்னேற்றதிற்கு உதவுவர்.

விவசாயிகள் சற்று கடினமாக உழைக்கவேண்டி வரும். விளைச்சலும் சுமாராகத்தான் இருக்கும். கால்நடைகளுக்கு நோய் தாக்கக்கூடும்.  எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். செலவுகளை சிக்கனமாக செய்யுங்கள். அதிக செலவு தேவைப்படும் பயிர் வகைகளை பயிரிடாதீர்கள். கடன் வாங்குவதை யோசித்து, தேவைகேற்ப வாங்குங்கள். தொழிலில் அதிக அக்கறை செலுத்துங்கள் அது உங்களின் பாதிப்பை குறைக்கும்.

பெண்மணிகளுக்கு தங்கள் வார்த்தைகளை நன்கு யோசித்து  பேசவேண்டிய ஆண்டாகும். வாக்கு வாதத்தில் ஈடுபடாமல்  விட்டுகொடுத்து போவது நல்லது. வேலைக்கு போகும் பெண்களுக்கு இது நல்ல ஆண்டாகவே அமையும். பிள்ளைகள் பெருமை தேடி தருவர்.

மாணவமாணவியர் இந்த ஆண்டு தொடக்கத்தில் படிப்பில்  விடாமுயற்சித் தேவைப்படும் ஒன்றுக்கு பலமுறை படித்து தெளிவாகிகொல்லுங்கள். மேற்படிப்பிற்கு. உழைபிற்கேற்ற மதிப்பெண் பெறுவீர்கள். மேற்படிப்பிற்கு நீங்கள் விருபிய துறையே கிடைக்க அதிகம் வாய்ப்புள்ளது.

பரிகாரம்: ஆஞ்சநேயரையும், பிள்ளையாரையும் வழிபாட்டு வரலாம். தவிர ராகுகாலத்தில் துர்கைக்கும், பரவருக்கும் பூஜை செய்யலாம்.