2017 புத்தாண்டு ராசிபலன் - தனுசு

(மூலம் , பூராடம் , உத்திராடம் 1)

தனுசு  ராசி அன்பர்கள் ஏழரை சனியின் ஆதிக்கத்தோடு புத்தாண்டு தொடங்குகிறதே இந்த ஆண்டு எப்படி இருக்குமோ என்று அஞ்ச வேண்டாம். கொஞ்சம் கவனமுடன் கையாண்டால் இந்தாண்டு உங்களுக்கு வெற்றிகரமான  ஏறுமுகம் காணும் ஆண்டாகவே அமையும். ஜனவரி 16-ல் குருபகவான் 11-ஆம் இடமான துலாம் ராசிக்கு மாறுகிறார், லாபஸ்தானதித்ற்கு குரு செல்வதால் உங்கள் அணைத்து முயற்சிக்கும் உறுதுனையாய் இருந்து வெற்றிக்கனியை பறித்து கொடுப்பார். குருபகவானின் துனையோடு தொடங்கும் இந்த 2017-ஆம் ஆண்டின் தொடக்கம் நல்லபடியாகவே இருக்கும். மார்ச் 10 முதல் அகஸ்ட் 31 வரை குரு வக்ரம் அடையும் காலத்தில் அவருடைய நற்பலன்கள் கொஞ்சம் குறையும். ஆனால் குருவால் பெரிய கெடுதல் ஏதும் இருக்காது ஆனால் ராகு, கேதுவை பொறுத்தவரை. ராகு 9 ஆம் இடமான சிம்மத்தில் இருப்பதால் உங்கள் விருப்பத்திற்கு சிலவற்றை செய்யமுடியாமல் போகலாம். தகப்பனாருடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இங்குதான் நீங்கள் சற்று கவனமாகவும் பொறுமையாகவும் கையாளவேண்டும். உங்களைச் சுற்றி உள்ளவர்களில் உங்களுக்கு ஆதரவாக இருப்பவர் யார் எதிரி யார் என குழப்பம் உண்டாகும்.  அதேசமயம் கேதுவை பொறுத்தவரை 3-ஆம் இடத்தில இருந்து கொண்டு உங்களுக்கு நன்மைகளை வழங்கிகொண்டிருகிறார். புதிய முயற்சிகள் யாவும் கைகூடும். ஜூலை 26 முதல் வருடம் முடியும் வரை ராகு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டிலும், கேது 2-ம் வீட்டிலும், அமர்வதால் குடும்பத்தில் சிக்கல்கள் உண்டாகலாம். ஆனால் உங்கள் ராசிக்கு ஏழரை சனி என்பதால் கஷட்டத்தை மட்டுமே கொடுப்பாரோ என்று எண்ணவேண்டாம். அவருடைய 7-ஆம் இடத்துப்பார்வையால் உங்கள் தெரியாத எதிரிகளிடமிருந்து உங்களை காத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவார். மார்ச் 10 முதல் அகஸ்ட் 31 வரை சனி வக்ரம் அடையும் காலத்தில் நன்மைகளும் சில சங்கடங்களும் கலந்தே இருக்கும்.

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றும். இக்காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்தல் அவசியம். அப்படி விட்டுகொடுத்துபோகும் பட்சத்தில் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். சமூகத்தில் மதிப்பு கூடும், புதிய பொறுப்புகளும் கிடைக்கலாம். புதியவர்களின் நட்பில் எச்சரிக்கை தேவை. பூர்வீகச் சொத்துக்களில் பிரச்சனைகள் உண்டாகலாம் எனவே சகோதர சகோதிரிகளுடன் மென்மையாக பழகுங்கள். நண்பர்களின் பேச்சை வேதவாக்காக எடுத்துக்கொள்ளாமல் தீர ஆராய்ந்து முடிவெடுங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். எந்த வேலையாக இருந்தாலும் உங்கள் நேரடி கண்காணிப்பில் செய்யுங்கள். சின்ன சின்ன விபத்துக்கள் உண்டககூடும் எனவே இரவுநேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. செப்டம்பர் தொடக்கம்  முதல் வருடம் முடியும் வரை குரு 11-ம் வீடான லாபஸ்தானத்தில் அமர்வதால் எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார். செய்யும் தொழிலை பொறுத்தவரை செப்டம்பர் மாதம் முதல் தொய்வில் மாற்றம் வரும். வருமானம் படிப்படியாக உயரும், தேக்கமின்றி லாபகரமாகவே இருக்கும்,  அரசுத்துறை சார்பான பிரச்சனைகள் குறையும். பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளுங்கள். வீடு-மனை வாங்க கூடிய யோகம் வரும், ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு வரும். பிள்ளைகளுக்கு நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர வாய்ப்புகிடைக்கும். அல்லது திருமணம் போன்ற சுப நிகழ்சிகளும் நடக்கலாம்.  உடல்நலம் மேம்படும். அனைத்தையும் திட்டமிட்டு செயல்புரிவீர்கள்,. 

 

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு நல்ல  லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க சிறந்த ஆண்டுதொடக்க காலம் மிகச் சிறந்த காலம், பங்குதாரர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் உங்கள் வியாபாரத்திற்கு சிறப்பான காலகட்டம் . யாருக்கும் ஜாமீன் தர வேண்டாம்.

பணியாளர்களுக்கு மார்ச் வரை நல்லபடியாக போகும் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சற்று பணிச்சுமை மிகுந்த இருக்கும். ஆனாலும், அனைவரையும் அனுசரித்து போவதால் அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும், மேலதிகாரிகளால் உங்களுக்கு சில நன்மைகள் உண்டாகலாம். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்து வந்தால் எந்தப் பிரச்சனையும் விலகிபோகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வும் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு புது வாய்ப்புகளுக்கு பஞ்சமிருக்காது விடாமுயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்ககூடிய ஆண்டாகும். பொது இடங்களில் நாவடக்கம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு ஜூலை வரை நல்ல பதவியும் பெயரும் கிடைக்கும் ஆனால் ஜூலைக்கு பிறகு சற்று தேக்கமாக இருக்கும்.  தொண்டர்களின் ஆதரவும்  முன்போல் இருக்காது.

விவசாயிகளுக்கு லாபகரமான ஆண்டாகவே இருக்கும்.. கால்நடைகளின் மூலமும் நன்மைகள் ஏற்படும்.

பெண்மணிகளுக்கு ஆண்டு தொடக்கமும் இறுதியும் சிறப்பாக இருக்கும். இடையில் குடும்ப ஒற்றுமை குறையக் கூடும். கணவருடன் விட்டுகொடுத்து போவதல் நன்மை பயக்கும். வீண் வாக்குவாதங்கள் அறவே கூடாது. அக்கம்பக்கத்தினர் துணையாக இருப்பார். செல்வம் வந்து சேரும். குழந்தைபாக்கியம் பெறுவார்.

மாணவமாணவியர் இந்த கல்வியாண்டில் சற்று கடினமாக இருந்தாலும், சற்று கூடுதல் கவனத்தை செலுத்தி படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம். மாநில அளவில் கூட மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடப்பது சாமர்த்தியம்.

பரிகாரம்: சனிகிழமை தோறும் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்  விநாயகப்பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபடுங்கள். தவிர வியாழன் தோறும் தச்சனமூர்தியை வழிபாட்டு வாருங்கள்.  துர்க்கையையும், பரவரையும் ராகுகாலதில் சென்று வழிபடுங்கள்.