2017 புத்தாண்டு ராசிபலன் - சிம்மம்

(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
 

சிம்மம் ராசி அன்பர்களுக்கு இது சிங்க நடைபோடும் ஆண்டாகவே அமையும். இந்த 2017 ஆம் ஆண்டின் தொடக்கம் அருமையாக இருக்கும். வீடு மனை கூட வாங்கலாம். குரு உங்களை தூக்கி நிறுத்தும் இடத்தில் உள்ளார் அவரால் நல்ல பலன்கள் உண்டாகும். வருமானம் உயரும். சுப நிகழ்சிகளும் சிறப்பாக அமையும். ஜனவரி-16-லிருந்து உங்கள் முயற்சிகலுக்கும் முட்டுக்கட்டை வரலாம். போட்டியாளர்கள் சதிசெய்யகூடும் ஆனால் உங்கள் முந்தய அனுபவங்களால் அதெல்லாம் முறியடித்து வெற்றிகாண்பீர்கள்   மார்ச் மாதத்திற்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் வரை குருவால் கிடைக்க கூடிய நன்மைகள் கூடும்  இருந்தாலும் உங்கள் ராசியிலிருக்கும் ராகுவால் சற்று அலைச்சல் படவேண்டியதிருக்கும். தற்போது கேதுவால் சில உடல்நலக்குறைவு ஏற்படலாம், ஆனால் பயப்பட வேண்டியதில்லை. நீங்கள் செய்யும் தொழிலில் எந்த தேக்கமும் இன்றி சிறப்பாக நடக்கும். 4-ஆம் இடத்தில் இருக்கும் சனியால் சாதகமில்லை என்றாலும் டிசம்பர் 18 வரை பாதகமும் இருக்காது.

ஜூலை-26 ல் ராகு பன்னிரெண்டாம் இடமான கடகதிற்கும் கேது ஆறாம் இடமான மகர ராசிக்கும் மாறுகின்றனர். இதனால் நெடுந்தூரப் பயணம் ஒன்று மேற்கொள்ள நேரிடலாம். பயணச் செலவுகள் கூடும் அது உங்கள் தொழில் வளர்ச்சிக்காகவும் இருக்கும். ஆறாம் இடத்து கேதுவால் பணம், பொருள் வரவு கூடும்.

மார்ச்சிக்கு பிறகு சங்கடங்கள் குறையத்தொடங்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும்.புதியவர்களின் நட்பில் எச்சரிக்கை தேவை. பூர்வீகச் சொத்துக்களில் பிரச்சனைகள் உண்டாகலாம் ,சகோதர சகோதிரிகளுடன் மென்மையாக பழகுங்கள். அவர்களுக்காக சிற்சில செலவுகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் கருது வேறுபாடுகள் குறையும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தொழில் செய்வோருக்கு நான்றாக உள்ளதால் இந்த காலகட்டத்தில். வருமானம் படிப்படியாக உயரும், நல்ல லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரருக்குள் ஒற்றுமை வளரும். உடல்நலம் மேம்படும். திட்டமிட்டு செயல்புரிவீர்கள்,

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு நல்ல லாபம் கிடைக்கும் . பங்குதாரருக்களின் ஒத்துழைப்பும், பணியாளர்களின் ஒத்துழைப்பும்  நல்லபடியாக இருக்கும். புதிய முயற்சிகளையும் செய்யலாம், அதற்கு அரசு உதவி பெறுவதில் சிக்கல் இருக்காது.

பணியாளர்களுக்கு பணிச்சுமை மிகுந்த ஆண்டாகும். சற்று கடினமாக இருக்கும். அனைவரையும் அனுசரித்து போக வேண்டியிருக்கும். இருந்தாலும் மேலதிகாரிகளால் சில பிரச்சனைகள் உண்டாகலாம். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்து வந்தால் எந்தப் பிரச்சனையும் விலகிபோகும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். ஊதிய உயர்வு தள்ளிப்போகலாம். யாரிடமும் உங்கள் பொறுப்பை ஒப்படைக்காதீர்கள்.

கலைத்துறையினருக்கு சிறப்பாகவே இருக்கும் மார்சிக்குப் பின் பணவரவு சற்று குறையலாம் ஆனால் புது வாய்ப்புகள் கிட்டும்.  வாய்ப்புகளை நிதானமான பரிசீலித்து உங்களால் முடியும் என்றால் மட்டும் ஒத்துக்கொள்ளுங்கள் இல்லையேல் வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு ஜூலை வரை நல்ல பதவியும் பெயரும் கிடைக்கும் ஆனால் ஜூலைக்கு பிறகு அதில் மற்றம் இருக்கும்  தொண்டர்களின் ஆதரவும்  முன்போல் இருக்காது. டிசம்பரில் மீண்டும் சிறப்பாக மாறும்.

விவசாயிகளுக்கு இந்தாண்டு சிறப்பாக இருக்கும். பாசன வசதிகளை மேம்படுத்த வேண்டியிருக்கும். கால்நடைகளின் மூலம் சிறிது நன்மைகள் ஏற்படும். புதிய முதலீடுகள் செய்யக்கூடும். தொழிலில் அதிக அக்கறை செலுத்துங்கள் உழைபிற்கேற்ற ஊதியம் நிச்சயம் உண்டு.

பெண்மணிகளுக்கு ஆண்டு நன்றாகவே இருக்கும்  இருக்கும். ஆண்டுதொடக்கத்தில் சில சில குடும்ப பிரச்சனைகள் தலைதூக்கும் ஆனால் உங்கள் சாதூரியத்தால் அவற்றை கடந்துவிடுவீர். கணவருக்கு விட்டுகொடுத்து செல்வீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணமாகும், குழந்தை இல்லார்க்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் குடும்பத்தையும் நன்றாக கவனிப்பீர்கள்.

மாணவமாணவியர் இந்த கல்வியாண்டு சற்று கடினமாக இருக்குமே தவிர சற்று கூடுதல் கவனத்தை செலுத்தி படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம்.

பரிகாரம்: விநாயகப்பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபடுங்கள். தவிர வியாழன் தோறும் தச்சனமூர்தியை வழிபாட்டு வாருங்கள்.  துர்க்கையையும், பரவரையும் ராகுகாலதில்