2017 புத்தாண்டு ராசிபலன் - கன்னி

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

கன்னி ராசி அன்பர்களுக்கு இது சிறப்பாக நடைபோடும் ஆண்டாகவே அமையும். இந்த 2017-ஆம் ஆண்டின் தொடக்கமே செவ்வாயின் சாதகமான நிலையில் தான் தொடங்கும். ஆகஸ்ட் வரை நன்றாகவே இருக்கும். சில நல்லவர்களின் நட்பு கிடைக்கும். குருபகவான் உங்களை தூக்கி நிறுத்தும் இடத்தில் உள்ளார் அவரால் நல்ல பலன்கள் உண்டாகும். வருமானம் உயரும். சுப நிகழ்சிகளும் சிறப்பாக அமையும். ஜனவரி-16-லிருந்து குரு 2-ம் இடமான துலாம் ராசிக்கு அதிசாரமாக செல்வது மேலும் உங்களுக்கு நன்மையாகவே  அமையும்.  சனிபகவானும் உங்கள் ராசிக்கு 3-இடத்தில் உள்ளார், இந்த காலக்கட்டத்தில் முயற்சிகள் வெற்றிபெறும். மார்ச் மாதத்திற்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் வரை குருவால் கிடைக்க கூடிய நன்மைகள் குறையும்.  இருந்தாலும் தொழில் வளர்ச்சியில் தொய்வு ஏற்படாது. தற்போது கேதுவால் சில உடல்நலக்குறைவு ஏற்படலாம், ஆனால் பயப்பட வேண்டியதில்லை. நீங்கள் செய்யும் தொழிலில் எந்த தேக்கமும் இன்றி சிறப்பாக நடக்கும். விருச்சகத்தில் இருக்கும் சனி  ஏப்ரல்-10 முதல் ஆகஸ்ட்-6 வரையுள்ள காலகட்டத்தில் வக்ரமடைகிறார் அந்த சமயத்தில் நற்பலன்கள் குறையும். வருடக் கடைசியில் அவர் தனுசு ராசிக்கு மாறுகிறார் இதுவும் உங்களுக்கு சாதகமாக இருக்காது.

ஜூலை 26-ல் ராகு பதினோராம் இடமான கடகதிற்கும் கேது ஐந்தாம் இடமான மகர ராசிக்கும் மாறுகின்றனர். இந்த காலகட்டத்தில் உங்கள் தொழிலில் நிபுணத்துவம் பெற்றவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும், அவர்களின் ஆலோசனைகள்  உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். பெண்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசுக்கு செலுத்தவேண்டிய வரவுசெலவு கணக்கு, வரி போன்றவற்றை நேரத்திற்கு செலுத்திவிடுங்கள், இல்லையேல் சிக்கல் ஏற்படலாம். எதிர்கால திட்டங்களுக்கான வேலைகளை ஆரம்பிப்பீர்கள். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும்.

செப்டம்பருக்கு பிறகு டிசம்பர் 18 வரை இந்த ஆண்டின் சிறப்பான காலகட்டமாக இருக்கும். தொழில் செய்வோருக்கு நன்றாக உள்ளதால் இந்த காலகட்டத்தில். வருமானம் உயரும், நல்ல லாபம் ஈட்டுவீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். சமூதாயத்தில் உங்கள் மதிப்பு கூடும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும், சுபகாரியங்களை வெற்றிகரமாக நடத்திமுடிப்பீர். ஆலயத் திருப்பனிக்கு உதவி செய்வீர். பங்குதாரருக்குள் ஒற்றுமை வளரும். உடல்நலம் மேம்படும். திட்டமிட்டு செயல்புரிவீர்கள், உற்றார் உறவினருக்கு உதவிகள் செய்வீர். புதிதாக சேமிப்பு கணக்குகளை தொடங்குவீர். புது வீட்டிற்கு மாறக்கூடும்.

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு ஜூலை முதல் ஆகஸ்ட் இறுதி வரைவரை சற்று கடினமாக இருக்கும். ஏதாவது சிறு சிறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். செப்டம்பர் முதல்  நல்ல லாபம் கிடைக்கும் . பங்குதாரருக்களின் ஒத்துழைப்பும், பணியாளர்களின் ஒத்துழைப்பும்  நல்லபடியாக இருக்கும். புதிய முயற்சிகளையும் செய்யலாம், அதற்கு அரசு உதவி பெறுவதில் சிக்கல் இருக்காது. அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். முக்கியமான பரிவர்த்தனைகளில் உங்கள் நேரடி மேற்பார்வையில் நடப்பது நல்லது.

பணியாளர்களுக்கு ஆகஸ்ட் வரை பணிச்சுமை சற்று கடினமாக இருக்கும். அனைவரையும் அனுசரித்து போக வேண்டியிருக்கும். இருந்தாலும் மேலதிகாரிகளால் சில பிரச்சனைகள் உண்டாகலாம். எதிர்பார்த்த ஊதிய உயர்வு தள்ளிப்போகலாம். யாரிடமும் உங்கள் பொறுப்பை ஒப்படைக்காதீர்கள். ஆகஸ்டுக்கு பிறகு காலம் உங்களுக்கு சாதகமாக  மாறும். உங்கள் பேச்சு எடுபடும் சம்பள உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு சிறப்பாகவே இருக்கும் மார்சிக்குப் பின் பணவரவு சற்று குறையலாம் ஆகஸ்ட் இறுதி வரை சற்று கடினமாகத்தான் இருக்கும். செப்டம்பர் முதல் வாய்ப்புகள் கிட்டும். 

அரசியல்வாதிகள் தங்களுக்கு மேலுள்ள தலைவர்களின் தேவையறிந்து செயல்படுவீர்கள். அதுவே நன்மையை தரும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.

விவசாயிகள் சற்று கடினமாக உழைக்கவேண்டி வரும் பாசன வசதிகளை மேம்மடுத்த வேண்டியிருக்கும். கால்நடைகளுக்கு நோய் தாக்கக்கூடும்.  தொழிலில் அதிக அக்கறை செலுத்துங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் நிச்சயம் உண்டு. கடன் வாங்குவதை யோசித்து, தேவைகேற்ப வாங்குங்கள்.

பெண்மணிகளுக்கு ஆண்டு நன்றாகவே இருக்கும் கணவரிடத்தில் நல்லபெயரும் பாராட்டும் கிடைக்கும். ஆடை-ஆபரணங்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நீண்ட நாளாக கோரியிருந்த வங்கி கடன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

மாணவமாணவியர் இந்த கல்வியாண்டு சாதனை படைக்க கூடிய ஆண்டாக அமையும். உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

பரிகாரம்: ராகுவையும் கேதுவையும் வழிபாட்டு வாருங்கள். வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியரை வழிபாடும் நல்ல பலனை கொடுக்கும். ஆதரவற்ற முதட்டிகளுக்கு உதவி செய்வதும், பசுக்களுக்கு கீரை கொடுப்பதும் நல்லது.