2017 புத்தாண்டு ராசிபலன் - கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

கடகம்  ராசி அன்பர்களுக்கு இது சுமாரான ஆண்டாகவே அமையும். குருபகவானின் கருணையோடு தொடங்கும் இந்த 2017 ஆம் ஆண்டின் தொடக்கம் நல்லபடியாகவே இருக்கும். ஆனால் போகப்போக ஏற்ற இறக்கம் இருக்கும். குருவால் பெரிய கெடுதலோ நன்மையோ இருக்காது ஆனால் ராகு, கேது மாறும் நேரம் பொருத்து உங்களுக்கு பிரச்சனைகள் அமையும். ஜனவரி 26 க்கு பிறகு குருபகவான் துலாம் ராசிக்கு மாறுவது உங்களுக்கு அவ்வளவு நல்லதாக இருக்காது. அனால் மார்ச்சிக்குப் பிறகு மீண்டும் கன்னிக்கு மாறுவதால் குரு உங்களை தூக்கி நிறுத்தும் இடத்தில் இல்லையென்றாலும் உங்களுக்கு பெரியகெடுதல் எதுவும் ஏற்படாது. மார்ச் மாதத்திற்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் வரை குருவால் கிடைக்க கூடிய நன்மைகள் குறையும் இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை.

ஜூலை 26 ல் ராகு கேது இடம் மாறுவதால் உங்கள் பிரச்னையும் மாறும் இதுவரை உங்கள் முயற்சியில்  சிறு சிறு தடைகளும் வீண் அலைச்சலும் இருந்திருக்கும் ஆனாலும் நீங்கள் அதையெல்லாம் போராடி  கடந்து வந்திருப்பீர்கள். தற்போது  அநிலை மாறி கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றும், மறையும். ஆனால் 5-ல் இருக்கும் சனிபகவானின் 7-ஆம் இடதுப்பர்வையால் அது உங்கள் வளர்ச்சிக்காகவே அமையும்.  இக்காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்தல் அவசியம். அப்படி விட்டுகொடுத்துபோகும் பட்சத்தில் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். செல்வமும் சேரும்.  புதியவர்களின் நட்பில் எச்சரிக்கை தேவை. பூர்வீகச் சொத்துக்களில் பிரச்சனைகள் உண்டாகலாம் எனவே சகோதர சகோதிரிகளுடன் மென்மையாக பழகுங்கள். நண்பர்களின் பேச்சை வேதவாக்காக எடுத்துகொள்ளாமல் தீர ஆராய்ந்து முடிவெடுங்கள்.

செய்யும் தொழிலை பொறுத்தவரை செப்டம்பர் மாதம் முதல் தொய்வில் மாற்றம் வரும். வருமானம் படிப்படியாக உயரும், தேக்கமின்றி லாபகரமாகவே இருக்கும், டிசம்பர் மாதம் வரை புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.  அரசுத்துறை சார்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிலர்  தொழில் ரீதியான வெளிநாட்டு அல்லது உள்நாட்டு பயணம்  மேற்கொள்ள கூடும் அப்பயணம் நன்மையாகவே அமையும். வெளிநாட்டினருடன் உள்ள  தொழில் தொடர்பு வளரும். பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளுங்கள். குழந்தை இல்லார்க்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். டிசம்பருக்கு பிறகு உடல்நலம் மேம்படும். அனைத்தையும் திட்டமிட்டு செயல்புரிவீர்கள்,. 

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்கள் சுமாராகவே இருந்து வரும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை பங்குதாரருக்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். யாருக்கும் ஜாமீன் தர வேண்டாம்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை மிகுந்த ஆண்டாகும். மார்ச் வரை நல்லபடியாக போகும் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சற்று கடினமாக இருக்கும். ஆனாலும், அனைவரையும் அனுசரித்து போவதால் அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும், மேலதிகாரிகளால் உங்களுக்கு சில நன்மைகள் உண்டாகலாம். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்து வந்தால் எந்தப் பிரச்னையும் விலகிபோகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைடும். ஊதிய உயர்வு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு மார்சிக்குப் பின் பணவரவு சற்று குறையலாம் அதனால், புது வாய்ப்புகளுக்கு அதிக முயற்சி செய்யவேண்டும்.  கிடைக்கும் வய்ப்புகளையும் நிதானமான பரிசீலித்து பின் ஒத்துக்கொள்ளுங்கள் இல்லையேல் வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு ஜூலை வரை நல்ல பதவியும் பெயரும் கிடைக்கும் ஆனால் ஜூலைக்கு பிறகு இறங்குமுகமாக கூட மாறலாம்.  தொண்டர்களின் ஆதரவும்  முன்போல் இருக்காது. டிசம்பரில் மீண்டும் சிறப்பாக மாறும்.

விவசாயிகளுக்கு ஜூலை 25 வரை சிறப்பாக இருக்கும். அதன் பிறகு செலவுகளைக் குறைத்து கொள்ளவும். கால்நடைகளின் மூலம் சிறிது நன்மைகள் ஏற்படும். பணபயிர்கள் கைகொடுக்காமல் போகலாம். புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம். இருக்கிற தொழிலில் அதிக அக்கறை செலுத்துங்கள்.

பெண்மணிகளுக்கு ஆண்டு தொடக்கமும் இறுதியும் சிறப்பாக இருக்கும். இடையில் குடும்ப ஒற்றுமை குறையக் கூடும். கணவருடன் விட்டுகொடுத்து போவதல் நன்மை பயக்கும். வீண் வாக்குவாதங்கள் அறவே கூடாது. அக்கம்பக்கத்தினர் துணையாக இருப்பார். செல்வம் வந்து சேரும்.

மாணவமாணவியர் இந்த கல்வியாண்டில் சற்று கடினமாக இருக்குமே தவிர சற்று கூடுதல் கவனத்தை செலுத்தி படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம். ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடப்பதே சாமர்த்தியம்.

பரிகாரம்:  வியாழக்கிழமை தட்சனாமூர்த்தி வழிபாடு,  அனுமன் வழிபாடு. பிள்ளையார் வழிபாடு நவகிரக வழிபாடு போன்றவை உங்களின் கடினமான காலங்களில் உறுதுணையாக இருக்கும்.