2 வயது முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

 அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியவை:-

    பருப்பு
    காய்கறிகள்
    பழங்கள்
    கொழுப்பு சத்து நிறைந்த பால், வெண்ணை, தயிர் முதலியவை
    உள்ளுத்த வடை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை சேர்த்தல் நலம்

    5 வயது வரை மற்ற எண்ணைகளுக்கு பதில் தேங்காய் எண்ணை சேர்த்து குழந்தைகள்ளுக்கு என்று தனியே சமைப்பது நன்று. குழந்தைகளுக்கு கசப்பு, புளிப்பு காரம் என்ற வேறுபாடுகள் கிடையாது. அனைத்தும் ஒவ்வொரு சுவை. ஆகவே பாகற்காய் கசப்பு அது வேண்டாம் என்று நாமே அதை ஒதுக்காமல் அவற்றை நன்கு வறுத்து குறைந்த கசப்புடனோ, கசப்புத் தெரியாத வண்ணமோ சமைத்துக் கொடுத்து பழக்கி விட்டால் பின்னாளில் அவை நமைப் போல் பகற்கையை ஒதுக்காமல் உண்ண பழகிக்கொள்ளும்.

    ஒரு எடுத்துக்காட்டுக்குத் தான் நான் பாகற்காயைச் சொன்னேன். இதே போல் அனைத்து காய்கறிகள், பழங்களையும் ஒதுக்காமல் நாம் இந்த வயதில் பழக்கிவிட்டால் பின்னாளில் என் குழந்தைக்கு இது பிடிக்காது என்று எந்தக் காய்கறியையும் சொல்லத் தேவையில்லை.

    குழந்தைகள் உண்ணாமல் அடம் பிடிப்பது உனாவின் ருசி பிடிக்கவில்லை என்று மட்டும் நாம் கருதி விடக் கூடாது. அவைகளுக்கு தம்மை சுற்றி இருக்கும் பொருள்கள் அனைத்தும் புதியவை. அவற்ற்றை அறிந்து கொள்ளும் ஆவலினாலும், விளையாட்டுத் தனத்தினாலும் தான் அதிகம் உண்ண மறுக்கின்றன. ஆகவே உணவு கொடுக்கும் போது புது புதுக் கதைகள் கூறி கொண்டே உணவு கொடுங்கள். கண்டிப்பாக அனைத்துக் குழந்தையும் அனைத்தையும் சாப்பிடும்.

    முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகள்.

அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள கூடாதவை :-

    கடைகளில் விற்கும் pizza முதலிய Junk foods
    சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க காற்று(GAS ) நிரப்பிய packed items
    மிகவும் பொறித்த மொரு மொரு Items .
    அதிக கிழங்கு வகைகள்
    காபி, டீ முதலியவை
    அதிக biscuits
    அதிக chochlates
    திரும்ப திரும்ப சுட வைத்த பால்
    கசடு நிறைத்த எண்ணை(அடிக்கடி பயன்படுத்திய எண்ணை

மேற்கூறியபடி தேவையான சத்தான உணவைக் கொடுப்பதுடன் தரையில் சிந்திய உணவை வாயில் வைக்காமல் பார்த்துக் கொண்டால் குழந்தை நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் வளரும்.

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு
இதனுடன் குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் நாம் உதவி செய்துவிட்டால் நம் குழந்தை தான் எல்லாவற்றிலும் முதல் என்று நாம் மார்தட்டி கொள்ளலாம்.

2 – 3 வயதில், அம்மா அப்பா பேசுவதை உன்னிப்பாகக் கேட்டு, அதற்குப் பதில் சொல்லத் தொடங்கும். பெற்றோர் அதிகம் பேசுவதால் மட்டுமே, குழந்தை நல்ல பேச்சுத் திறனுடன் பிரகாசமாகஜொலிக்கும். இந்த வயதில் குழந்தையுடனான உரையாடல் இல்லாமல்போனால், குழந்தை பேசுவதும் தாமதமாகி விடும். குழந்தை சரியாக பேசவில்லை என்பதை உணர்ந்தால், ‘ஸ்பீச் தெரப்பிஸ்ட்’டிடம் ஆலோச னை பெறுவது அவசியம்.

குழந்தைகளிடம் பாதுகாப்புடன் பழகுங்கள் கிடைப்பதை எல்லாம்வாயில் வைக்கும் பழக்கம், விரல் சூப்பும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்படுவது சகஜம்தான். ஒருவிதப் பயத்தினாலும் சில குழந்தைகள் விரலைச் சூப்பலாம். ஆனால், அதுவே தானாகச் சரியாகி விடும். ‘விரல் சூப்பினா ல் வாய் பெரிதாகிவிடும் கண்ணா. கிருமிகள் வயித்துக்குள்ள போய் ஃபைட் பண்ணும்’ என்று மென்மை யாக ஒரு கதை போல் சொன்னால், நிச்சயம் குழந்தைகள் அந்தப் பழக்கத்தை விட்டுவிடுவார்கள்.

குழந்தைகளுக்கான மென்மையான பிரஷினால் பல் தேய்த்து, வாய் கொப்பளித்த பின்னரே வயிற்றுக்கான ஆகாரத்தைத் தரப்பழக்குங்கள். பல் துலக்காமல் சாப்பிடும்போது, வாயில் உள்ள கிருமிகள் வயிற்றுக்குள் போய் பல்வேறு பிரச்னை களை உண்டாக்கும்.

இரண்டு வயது குழந்தைகள் 10 மணி நேரம் நன்றாக உறங்குவார்கள். சில குழந் தைகள் அதிக நேரம் தூங்க மாட்டார்கள்.
அதற்கு வீட்டுச்சூழல், அறையின் உஷ்ணம், சத்தம், கொசுக்கடி போன்ற ஏதாதது காரணம் இருக்கும். குழந்தை குறைவான நேரமே தூங்கினாலும், சுறுசுறுப்பாக இருந்தால், அதை நினைத்துக் கவலைப்பட வேண்டியது இல்லை. சில குழந்தைகள் மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிப்பார்கள். சில நேரங்களில் பச்சை யாகவும் மலம் வெளியேறும்.
எப்போதாவது இப்படி நிகழ்ந்தால் ஆபத்து இல்லை. ஆனால், தொடர்ச்சி யாகப் பச்சை நிறத்தில் இருந்தாலோ, வயிற்றை இளக்கிச்சென்றாலோ மருத்துவரிடம் காட்டுவதே நல்லது. ஒரு வயதான பிறகு சிறு நீர், மலம் கழிப்பது எப்படி என்பதைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுங்கள் .

ஓடிப்பிடித்து விளையாடுவது, விளை யாட்டுப் பொருட்களை வாங்கித் தந்து ஊக்குவிப்பது, கற்பனைத் திறனை அதிகரிக்கச் செய்யும் ஓவியம், பெயிண்டிங் கற்றுத் தருவது, இசையைக் கேட்கச் செய்வது, களிமண் அல்லது சப்பாத்தி மாவைப் பிசைந்து பலவிதமான உரு வங்கள் செய்யச் சொல்வது, பேப்பர் களை மடக்கி விமானம், கப்பல், பூக்கள் செய்யக் கற்றுக்கொடுப்பது எனக் குழந்தைகளுக் கான உற்சாக வழிகளைத் திறந்து விடுங்கள்.
குழந்தைகளுக்குப் பயனாக இருக்கும் பட்சத்தில் மட்டும் தொலைக் காட்சிப் பெட்டியின் முன்னால் உட்கார வையுங்கள்.
தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்குக் குழந்தைகள் அடிமையாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுவைக்கும் பேச்சுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. இனிப்பு, உவர் ப்பு, புளிப்பு, காரம் என அனைத்து சுவைகளும் பழகியக் குழந்தைக்கு பேச்சில் பிரச்னை இருக்காது. ஏதாவது ஒரு சுவை மட்டுமே பழக்கப்பட்ட குழந்தைக்குப் பேச்சு தெளிவாக இருக்காது. கோர்வையாக வார்த்தைகளைப் பேசத்தாமதம் ஆகலாம். ஆகவே, அனைத்து சுவைகளையும் சுவைக்கப் பழக்குங்கள்.

குழந்தையால் எவ்வளவு சாப்பிட முடியுமோ… அந்த அளவு மட்டுமே உணவு கொடுங்கள். சாப்பிட்டு முடித்த உடன், ‘வெரிகுட்’ சொல்லுங்கள். ‘சமத்து’ எனக்கொஞ்சுங்கள். குழந்தைத் தானாக முன் வந்து சாப்பிடும்போது, உணவு சிந்தினாலோ, கொட்டினாலோ, திட்டாதீர்கள். சிந்தாமல் சிதறாமல் சாப்பிடக் கற்றுக்கொடுங்கள்.

துவைத்த துணிகளை மடித்து, குழந்தைகளை பீரோவில் அடுக்கச் சொல்லுங்கள். சுவாரஸ்ய அனுபவமாக நினைத்து குழந்தைகள் அந்த வேலையை உற்சாகமாகச் செய்வார்கள். வேலை, விளையாட்டு, உணவு என அனைத்தின் வழியாகவும் பழக்கங்களை உருவாக்கலாம்.
.
சமைக்கும்போது,
‘இதுதக்காளி, இது வெண்டைக்காய்… இதை நான் நறுக்கப்போறேன்’ என்று காய்கறிகளைக் காட்டி, வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தலாம். குழந்தை சுயமாகச் சிந்திக்கவும், அனைத்து செயல்களைத் திறமையாகச் செய்யவும் இது வாய்ப்பாக அமையும். ‘செய்யாதே’ எனத் தடுப்பதற்கு முன் எதைச் செய்யலாம் என்பதைக் கற்றுக் கொடுங்கள். ஒரு பாராட்டும் முத்தமும் குழந்தையின் பிரகாசமான வாழ்க்கை க்கு வழிவகுக்கும்.