1 வயது முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு

குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு.

குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பிறகு சாப்பாட்டைப் பொறுத்த வரை எந்த நிர்பந்தமோ கட்டுப்பாடோ கிடையாது. குழந்தைக்கு விருப்பமான விதத்தில் அதிக அளவு காய்கறிகளும், பழங்களும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெரியவர்களைப் போல 3 வேளை என்றில்லாமல் 5 முதல் 7 வேளை குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

பால் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வேளை கொடுக்கலாம்
காய்கறிகள் 2 வேளை
பழங்கள் 2 வேளை
உணவு(அரிசி, கோதுமை) முதலியவை 3 வேளை
கொழுப்பு (நெய், வெண்ணை, தயிர் முதலியவை)1 அல்லது 2 வேளை.

குறைந்தது மேற் சொன்ன அளவாவது குழந்தைக்கு கொடுக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் கலோரி கணக்கில் குழந்தையின் 1கிலோ எடைக்கு 110 கலோரி என்ற விகிதத்தில் கணக்கிட்டுக் கொடுத்தல் நலம்.

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு

மேலும் குழந்தை இந்த வயதில் தான் அனைவரையும் உற்று நோக்கி பல பாடங்களைக் கற்றுக் கொள்வான். ஆகவே நாம் நல்ல பழக்கவழக்கங்களுடன் நல்லதையே பேசி குழந்தையின் முன் வலம் வந்தால் தான் நம் குழந்தை நல்லவனாக வளருவான்.

குணத்தில் நல்லவனாக, ஆரோக்கியமானவனாக வளர்வதைப் பற்றிப் பார்த்தோம். அவன் அறிவாளியாக புத்திசாலியாக வளர்வதற்கு பின் வரும் பயிற்சிகளைச் செய்யவும்.

பயிற்சிகளை, பல நல்ல விழயங்களை உங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் வண்ணம் அவர்களுக்கு  நீங்கள் எவ்வாறு கற்றுக் கொடுப்பது, கற்றுக் கொடுக்கும்போது கவனத்தில் வைக்க வேண்டியவை எவை எவை என்பது  பற்றியும், அறிய இந்த வலைதளத்தினை தொடர்ந்து  படிக்கவும்.

உங்கள் குழந்தை குறுநடை போடும்போது விழுந்துவிடுவானா எதையாவது போட்டு உடைப்பானா எனப் பெற்றோர்கள் திகிலில் இருக்கும் காலமும் அதுதான்.

குறுநடைபோடும் காலம் என்பது பொதுவாக ஒன்று முதல் மூன்று வயது வரை எனக் குறிப்பிடுகிறார்கள்.

குறுநடைபோடும் காலமானது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மட்டும் முக்கியமானதல்ல.

அது குழந்தைகளின்

    அறிவாற்றல்,
    உணர்ச்சிகளின் வெளிப்பாடு
    சமூக உறவுகளின் விரிவு

போன்றவவை வளர்வதற்குமான மிகவும் முக்கிய காலப்பகுதியாகும்.

இக்காலத்தில் வாசிப்பதானது அவர்களது கற்கை ஆற்றலையும், அறிவு வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

இக்காலத்தில் அவர்களை வாசிக்க தூண்டுவதானது அவர்களை வாழ்நாள் முழுவதும் வாசிப்பில் ஆர்வம் கொள்ள ஊக்குவிப்பதாக அமையும் என American Academy of Pediatrics சொல்கிறார்கள்.

    குழந்தையைக் கட்டித் தழுவி அமைதியும் செளகர்யமும் நிறைந்த இடத்தில்  குழந்தையுடன் கூடியிருந்து வாசியுங்கள்.  உங்கள் குழந்தை தவறாக உச்சரிக்கும் வார்த்தைகளைக் கவனத்தில் எடுத்து அவற்றை சரியான முறையில் நீங்கள் உச்சரித்து குழந்தையை அவதானித்து முயற்சி செய்து முன்னேற உதவுங்கள். வாசிப்பதை தெளிவாக மட்டுமின்றி மிகவும் ஆறுதலாகவும் செய்வதன் மூலம் அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை குழந்தை புரிந்து கொள்ள உதவ முடியும்.

    குழந்தை உற்சாகமற்று சோர்வாக இருக்கும் நேரங்களில்  குழந்தையை அமைதிப்படுத்தி ஆற்றுப்படுத்தி மகிழ்ச்சியில் ஆழ்த்த வாசிப்பு நேரங்களைப் பயன்படுத்தலாம். ஒருபோதும் அது தண்டனையாக மாறக்கூடாது. அவ்வாறானால் அது உங்கள் நோக்கத்தையே கெடுத்துவிடும்.

எதிர்காலத்தில் வாசிப்பில் அக்கறை காட்டி அதில் மகிழச்சியுறும் பெரியவராக அந்தக குழந்தை வளரும்.