வேலைவாய்ப்பை அல்லத்தரும் இரப்பர் டெக்னாலஜி

இன்றைய தினம் பலரும் உபயோகிக்கும் காலணிகள் முதற்கொண்டு பல இர[ப்பர் பொருட்கள் மரத்தில் இருந்து பிரித்தெடுக்கும் இரப்பரின் முழுமை பெற்ற வடிவம் தான். மிதிவண்டி, மோட்டார் சைக்கில், கார், லாரி, சைக்கிள், விமானம், ரேஸ்கார்கள் என அனைத்து போக்குவரத்து வாகனங்களிலும் பயன்படுகிறது. உணவுப்பொருட்கள் தயார்செயும் தொயிற்சாலைகள் முதல் அணுமின்நிலையம் வரை பல தொழிற்சாலைகளில் பயன்படுகிறது. இயற்கையில் இதைத்தவிர இரப்பர் பல்வேறு தொழிலிலும் பல்வேறு இயந்திரங்களின் உதிரி பாகங்களிலும் பலபல வகையில் பயன்படுகிறது.

பொறியியல் படிப்பில் இந்த தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க இரப்பர் டெக்னாலஜி என்ற துறை தொடங்கப்பட்டது. மூன்று ஆண்டு டிப்ளமோ மற்றும் நான்காண்டு பி.இ.,/பி.டெக், எம்.டெக்., படிப்பாக, ரப்பர் டெக்னாலஜி வழங்கப்படுகிறது. காம்பவுண்டிங், வல்கனைசேஷன், பிராசஸிங் என இதில் தேவையான இரப்பரை தேர்வு செய்வது முதல் அதற்கு பல்வேறு வடிவங்கள் கொடுப்பது வரை அணைத்துப் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. இதுதவிர இத்துறையில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், சுற்றுசூழல் பாதுகாப்பு , இரப்பர் மறுசுயர்ச்சி, பயிற்றுவிக்கப்படுகிறது.

Apollo Tyres Ltd, Jayashree Polymers group, L.M.Fibres Ltd, Ceat Tyres Ltd, Mumbai, Hi Tech Carbon Ltd, St Gobain Industries, MRF Ltd, TVS Motors Ltd.  போன்ற நிறுவனங்களில் இத்துறையில் படித்தவர்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. நம்நாட்டிலும் வெளிநாட்டிலும் இத்துறையில் வாய்ப்புகள் அதிகமுள்ளது. இந்தியாவில் மோட்டார் வாகன தொழிற்சாலைகள் பெருகிவரும் நிலையில் இத்துறைக்கான வாய்ப்புகளும் பெருகிகொண்டே வருகிறது. இருந்தாலும் இதிலுள்ள வாய்ப்புகளை இன்னும் பலர் அறியாமலேய உள்ளனர். எனவேதான் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு கிராக்கி அதிகமுள்ளது.

இத்துறையில் பயின்றவர்களுக்கு

  • Production Engineering
  • Testing Technologist
  • Marketing Executives
  • Engineer Assistant
  • Process Engineeirng Technologist
  • Polymer Specialists
  • Facilities Manager
  • Marketing Technologist
  • Quality Control Specialist
  • Mould and Die Development Technologist

போன்ற பதவிகளில் பணியமர்தபடுவார்கள்.

நம் நாட்டில் கீழ்கண்ட கல்வி நிறுவனங்கள் ரப்பர் டெக்னாலஜி படிப்பைத் தருகின்றன:

 MIT Campus, Anna University,
Chromepet, Chennai 600 044
Phone : (91)44 22232403 22235046(R)
Website : http://www.mitindia.edu

ட்டம்:  B.Tech in Rubber Technology & M.Tech Rubber Technology

Cochin University of Science and Technology
Kochi 682022
Phone : +91 0484 2575396, 2577550
Website : http://www.cusat.ac.in

ட்டம்:  B. Tech.Polymer Science and Engineering M.Tech. Polymer Technology and Phd

Indian Institute of Technology Kharagpur
Kharagpur, India - 721302
Phone: +91-3222-255221

FAX : +91-3222-255303

http://iitkgp.ac.in/

ட்டம்:MS (Rubber Technology), M.Tech. Rubber Technology, Ph.D. (Rubber Technology)

Rubber Research Institute of India
Rubber Board PO Kottayam 686 009
Kerala, India
Phone : 91481235331120
Fax : 914812353327
Email : info@rubberboard.org.in
Website : http://rubberboard.org.in

ட்டம்:  Research work in rubber technology

LD College Of Engineering
Opposite Gujarat University, Navrangpura 380015
Ahmedabad, Gujarat.

Phone No: 079 2630 2887
Email: ldce_ciiilp@yahoo.com

http://ldce.ac.in/

ட்டம்:  B.Tech in Rubber Technology

Hindustan College of Engineering
Campus: Old Mahabalipuram Road,
Padur, Kelambakkam 603 103.
Phone : 044 2747 4262 / 2747 4385 / 2747 4395
Fax : 044 2747 4208
Email : hetc@vsnl.com
Website : http://www.hindustancollege.com/rubber_technology.html

ட்டம்:  B.Tech in Rubber Technology