வீல் அண்டு ஆக்சில் பிளான்ட்டில் வேலை.

பெங்களூருவில் வீல் அண்டு ஆக்சில் பிளான்ட் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்த ரெயில் வீல் பாக்டரி நிறுவனம்  இந்திய ரயில்வேக்கு தேவைப்படும் சக்கரங்கள், அச்சு, மற்றும் சக்கர செட்டுகளைத் தயாரித்து வழங்கி வருகிறது.

இந்நிருவனம் அதன் தயாரிப்புகளை  இந்தியன் ரயில்வேக்கு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கும்விற்பனை செய்து  வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்திற்கு  டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக உள்ள 192 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்:

RWF  நிறுவனத்தின் டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களில் பிட்டரில் - 85 இடங்கள்.

மெஷினிஸ்டில் 31 இடங்கள்

எலக்ட்ரீசியனில் 18 இடங்கள்

மெக்கானிக்-மோட்டார் வெகிக்கிளில் 8 இடங்கள்.

டர்னரில் 5 இடங்கள்.

எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 22 இடங்கள்

சி.என்.சி., புரொகிராமிங் கம் ஆபரேட்டரில் 23 இடங்கள்.

தேவையான தகுதிகள்:
வயது: 01.07.2015 அடிப்படையில் 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் உள்ளிட்ட அறிவியல் பாடத்தை படித்திருக்க வேண்டும். அல்லது  பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். ஐ.டி.ஐ., படிப்பை என்.சி.டி.வி.டி., சான்றிதழ் அங்கீகாரத்துடன் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக மேலே குறிப்பிடப்பட்ட ஏதாவது ஒரு டிரேடு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

பயிற்சிக் காலம்: இந்த பயிற்சி ஒரு வருட காலத்திற்கானது.

ஸ்டைபண்டு: ஒரு வருட காலத்திற்கான பயிற்சியில் மாதம் 9 ஆயிரத்து 909ம், 6 மாத பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.8 ஆயிரத்து 808ம் ஸ்டைபண்டாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?: மேற்கண்ட தகுதி உடைய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்துடன் உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

The Assistant Personnel Officer, Rail Wheel Factory, Yelahanka, Bangalore-64

விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.07.2015
விண்ணப்ப படிவம்: http://www.rwf.indianrailways.gov.in/downloadfile.jsp?fileid=32&filename...