விவசாய நிலங்களை ஒரு போதும் அபகரிக்க மாட்டோம்

சண்டிகர்: நிலம் கையப்படுத்தும் அவசர சட்டத்தின் கீழ் விவசாய நிலங்களை ஒரு போதும் அபகரிக்க மாட்டோம் என பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா மாநிலம் மாநிலமாக சென்று கட்சியை வலு சேர்த்து வருகிறார்.. நேற்று வெளியிட்ட அறிப்பில் 10 கோடி உறுப்பினர்கள் பா.ஜ.வில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பா.ஜ. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இரண்டு நாட்களாக நடந்துவருகிறது. இதில் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு கட்சியை வலுசேர்க்கும் விதமாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் பேசியதாவது, ஏழை விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டம், அவர்களுக்கு எளிதான கடனுதவி வழங்கிடும் முத்ரா வங்கி திட்டம், போன்ற திட்டங்கள் மூலம் நாடு முழுவதும் விவசாயம் சார்ந்த திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது.

இதனை எதிர்க்கட்சிகள் , பெரு நிறுவனங்களுக்கு சாதமாக செயலபடுவுதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றன.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் விவசாய நிலங்களை மத்திய அரசு ஒரு போதும் அபகரிக்காது, மேலும் குறைந்தவிலைக்கு நிலங்கள் வாங்கப்படமாட்டாது. அவரச சட்டம் குறித்து தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றார்.
முன்னதாக இன்று நடக்க உள்ள மெகா பேரணியில் அமித்ஷா உரையாற்றுகிறார்.