ராமமோகன் ராவ் மகன் விவேக்கிடம் ஐந்து மணிநேரம் விசாரணை.

TN Images: 

ராமமோகன் ராவின் மகன் வருமானவரித்துறைக்கு போதிய ஒதுழைப்பு அளிக்காத்ததால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவந்தனர். ஒரு வாரமாக டிமிக்கிகொடுத்த ராமமோகன ராவின் மகன் விவேக், வருமான வரித்துறை அலுவலகத்தில், நேற்று மாலை திடீரென ஆஜரானார். அவரிடம், வருமானவரித்துறை அதிகாரிகள் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தினர்.

ராமமோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக், மற்றும் அவருடைய வக்கீல் நண்பர் அமலநாதன்  உள்ளிட்டோர் வீடுகளில், டிச., 21ல், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள், நகை மற்றும் லட்சக்கணக்கான ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து  விசாரணைக்கு ஆஜராகும்படி, விவேக் மற்றும் அவருடைய வக்கீல் நண்பர் அமலநாதன் ஆகியோருக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பினர், இதில் அவருடைய வக்கீல் ஆஜராகி விளக்கம் அளித்துவருகிறார் ஆனால் விவேக் தன்னுடைய மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி தனக்கு விலக்கு அளிக்கும்படி ஆஜராகாமல் இழுத்தடித்து வருகிறார். அதை வருமானவரிதுரையினர் ஏற்கவில்லை. தொடர்ந்து நினைவூட்டல் கடிதமும், SMS-ம் அனுப்பி பார்த்தனர் எதற்கும் பலன் கிடைக்காததால். அடுத்தகட்ட நடவடிக்கைக்கையாக

மீண்டும் அதிரடியாக அவர்களுக்கு விவேக்கின் வீடுகளிலும் அவருக்கு அடுத்தகட்டமாக நெருக்கம் கொண்டவர்களின் வீடுகளிலும் சோதனையிடலாமா அல்லது  கோர்ட்டை அணுகி கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்கலாமா என ஆலோசனை நடத்திவந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், கூடிய விரைவில் ஆஜராகிறேன்  என, புலனாய்வு அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். நேற்று 2.30 மணி அளவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு. நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், நேற்று பிற்பகல், 3:45 மணிக்கு ஆஜரானார்
 
விசாரணை நடத்திய அதிகாரிகளிடம் பணம் மற்றும் நகைகள் வாங்கியது மற்றும் சொத்து ஆவணங்களுக்கான ஆதாரங்களை காண்பித்தார். இதனை பார்வையிட்ட அதிகாரிகள் குழுவினர் அவற்றை போதிய நகல் எடுத்துக் கொண்டனர்.

அவரிடம், வீட்டில் சிக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடந்தது. சேகர் ரெட்டி உடன் உள்ள வர்த்தக தொடர்புகள், பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன.

மேலும் அவரது தந்தை ராமமொகன ராவ் தலைமைச் செயலாளராக இருந்த காலத்தில் செய்த வர்த்தக விவரங்கள், மற்றும் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,அதிகாரிகளுடனான தொடர்புகள் குறித்தும் விசாரித்ததாக கூறபடுகின்றன.

மேலும், வருமான வரித்துறை வலையில் சிக்கியுள்ள  புரோக்கருக்கும்  விவேக்கிற்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்பட்டது.

ஏறக்குறைய ஐந்தரை மணி நேரம் விசாரணை நடந்தது, விசாரணை அனைத்தும் விடியோ எடுக்கப்பட்டுள்ளது. அப்போது,  விவேக் பல கேள்விகளுக்கு மழுப்பலான பதிலையே கூறியதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, ராமமோகன ராவிடமும், விசாரணை நடக்ககூடும், விவேக்கிடம் கிடைக்கபெறும் தகவல்களை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்க இருப்பதாக தெரிகிறது.