ராகுலை கழற்றிவுட்ட எதிர்கட்சிகள், சரிகட்டும் முயற்சியில் சோனியா.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் இது ஊர் அறிந்த உண்மை. ஆனால், பொதுமக்களை விட சில கட்சிகளை சேர்ந்த பல ஆசியல்வாதிகள் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டுளனர் என்பதும் உண்மை. இவர்களை காப்பாற்றுவதற்காக பக்கத்து இலைக்கு பாயசம் கேட்டு குளிர்கால கூட்டததொடர் முழுவதும் முடக்கியதால்   சுமார் 300 கோடிகள் நாசமாகாபட்டது தான் மிச்சம். பாராளுமன்றகூடதொடர் முழுவதும் நடத்தவிடாமல் செய்த ராகுல் கூட்டததொடரின் இறுதி தினத்தன்று பிரதமர் மோடியை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தார்.

ராகுல் பேச்சை நாம்பி காங்கிரசோடு இணைந்து களத்தில் நின்ற மற்ற கட்சிகளுக்கு இதனால் பெருத்த எமாற்றமாம். இதனால் கோபமுற்ற சில எதிர்கட்சிகள் இனி இந்த விஷயத்தில் ராகுலுடன் இணைந்து செயல்படகூடாது என முடிவெடுத்துள்ளதாக  தெரிகிறது.

எனவேதான் இன்று நடைபெறவிருந்த காங்கிரஸ் நடத்தும் கூட்டத்துக்கு 16 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும். இக்கூட்டத்திற்கு  இடது சாரிகள், அ.தி.மு.க., சமாஜ் வாடி, பகுஜன்சமாஜ், தேசிய வாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய 8 அரசியல் கட்சிகள்  பங்கேற்கவில்லை என்று தெரிகிறது. இதுவே அவர்களுடைய கருது வேற்றுமையை பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இருந்தும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 8 அரசியல் கட்சிகள் மட்டுமே அடங்கிய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எந்த பலனும் ஏற்படவில்லை என்றும் இத்திட்டம் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.  ஏழை, நடுத்தர மக்களின் 2 மாத சிக்கல் இன்னும் தீரவில்லை பொங்கி எழுந்துள்ளார். இத்திட்ட அறிவிப்பு ஒரு மிகப்பெரிய ஊழல் என்றும் இது எமர்ஜென்சி இல்லை. சூப்பர் எமர்ஜென்சி என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.  எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் பிரதமர் அறிவித்து மக்களை வேதனைப்படுத்தி வருகிறார் என்று அவர் கூறியுள்ளார். வெறும் 6 சதவீத கருப்பு பணமே பணமாக புழக்கத்தில் உள்ளதாகவும். மற்றவை நிலங்களாகவும் வேறு முதலீடுகளாகவும் இருப்பதாக தி.மு.க சார்பில் பேசிய திரு.திருச்சி சிவா கூறினார்.

அதெல்லாம் சரி எங்க மத்தவங்கள காணோம் என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, அவங்கவங்க மாநிலத்துல சில முக்கிய வேல இருகிறதால வரமுடியலைன்னு சொல்லிட்டாங்களாம்.

இதல்லாம் நம்பவா முடியுதுன்னு நீங்க கேக்கறது புரியுது. அதனாலதான் எதிர்க் கட்சிகளிடையே சரிகட்டும்  முயற்சிகளில் சோனியா இறங்கியுள்ளதா சொல்றாங்க.