மோடி மங்கோலிய அரசுக்கு 6500 கோடி கடன் உதவி

தற்சமயம் சீனாவிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி அப்படியே மங்கோலியாவிற்கு தனது பயணத்தை நீட்டித்து கொண்டார். அங்கு சென்றுள்ள மோடிக்கு ரத்தின கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

மங்கோலியா சென்றுள்ள இந்திய பிரதமர் முன்னிலையில் இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சீனாவில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு மங்கோலியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு தலைநகர் உலன் பட்டோரில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மங்கோலிய வீரர்களின் அணி வகுப்பு மரியாதையையும் மோடி ஏற்றுக்கொண்டார். பின்னர் மங்கோலிய பிரதமரை சந்தித்து பேசினார். இவரது முன்னிலையில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

  

இதைதொடர்ந்து மங்கோலியாவில் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு இந்தியா உதவி செய்வதற்கான ஒப்பந்தம் உட்பட இரு நாடுகளிடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் கூட்டறிக்கையை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, மங்கோலியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியா 6500 கோடி ரூபாய் கடன் உதவி அளிக்கும் என்றார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மங்கோலிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகின்றார். மங்கோலியா சென்றுள்ள முதல் பிரதமரான மோடி உரையாற்றுவதற்காக விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமை அந்நாட்டு நாடாளுமன்றம் கூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்பதாலோ இப்படி செய்திருக்கிறார்..? பொறுத்திருந்து பார்ப்போம்