மேகி நூடுல்சுக்கு தமிழ் நாட்டில் தடை வருமா?

TN Images: 

சென்னை, தமிழ்நாடு,

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சுக்கு கேரளா, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.  மேகி நூடுல்சில் உடல்நலத்துக்கு  கேடுவிளைவிக்கும் வேதிப்பொருள்களான நிர்ணயயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கலக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிறுவன நடத்திய ஆய்வில் தெரியவந்தது. அதனை அடுத்து மேகி நூடுல்சுக்கு தடையும், நெஸ்லேக்கு எதிராக வழக்கும் உ.பி அரசு சார்பில் தொடரப்பட்டது.

புதுடெல்லி மாநில அரசும் 13 மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை ஆய்வு செய்ததில் அதில் திகமாக, கேடுவிளைவிக்கும் வேதிப்பொருள்களான நிர்ணயயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கலக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து அம்மாநில அரசும் தடைவிதித்துள்ளது.

கேரளா மாநில  அரசின் உணவு மற்றும் நுகர்வோர் துறை முதற்கட்டமாக  மேகி நூடுல்ஸ்களை அரசு சார்பில் இயக்கப்படும் 1,300  உணவு வழங்கல் அங்காடிகளில் விற்க தற்காலிக தடைவிதித்தது. 

தமிழகம், தெலங்கானா, ஹரியானா, கர்நாடாக குஜராத், இமாச்சலப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகள் மேகி நூடுல்ஸ் மாதிரிகளை ஆய்வுக்கு  அனுப்ப உத்தரவிட்டுள்ளன.

தமிழகத்தில் 6 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட மேகி நூடுல்ஸ் மாதிரிகளை பெற்றுள்ளதாகவும் . அவற்றை நெல்லை, மதுரை, சேலம், கோவை, கிண்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு சோதனைக் கூடங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பரிசோதனை அறிக்கையில் என்ன கூறப்படுகிறதோ, அதன் அடிப்படையில் மேகி நூடுல்ஸ் கம்பெனி மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.