மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடந்தது. அதில் முக.ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 3500 க்கும் மேற்பட்ட பொதுகுழு

பொதுகுழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முதல் தீர்மானமாக மறைந்த முதல்வர். ஜெ.ஜெயலலிதா, முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணி, சற்குனப்பாண்டியன், துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மற்றும் பிடல்காஸ்ட்ரோ ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 1 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதையடுத்து திமுக செயலாளர் க.அன்பழகன் ஸ்டாலினை செயல் தலைவராக அறிவித்தார். அதை துரைமுருகன் வழிமொழிந்தார் அதை பொதுக்குழு உறுபினர்கள் எழுந்தின்று வரவேற்றனர்.

பின்பு ஏற்புரை ஏற்று பேசிய ஸ்டாலின் பொதுகுழு கூட்டத்தில் பேசிய தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்தொட பொறுப்பை கனத்த இதயத்தோடு ஏற்றுகொள்வதாக தெரிவித்தார். மேலும் அவர்

நான் இதற்கு முன்பு கட்சியின் பல்வேறு பதவிகளுக்கு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டேன் அபோழுதெல்லாம் எல்லையில்லா மகிழ்ச்சியை பெற்றேன்.  ஆனால் தற்பொழுது தலைவர் கருணாநிதி உடல் நலம் சரி இல்லாத நிலையில் மகிழ்ச்சி வரவில்லை. நான் சென்னை மேயராக பொறுப்பேற்ற பொழுது அறிவுறுத்தியபடி எனக்கு அளித்த செயல்தலைவர் பதவியை பதவியாக கருதவில்லை  எனக்கு அளித்த பொறுப்பாக கருதுகிறேன். தலைவருக்கு உறுதுணையாக செயலாற்றுவேன். கழகத்தின் தலைவர், செயலாளர் மற்றும் முன்னோடிகளின் வழிகாட்டுதலின்படி செயலாற்றுவேன் என்று அவர் கூறினார்.

திமுக பொதுகுழுவில் இயற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள்

 • 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மதிய அரசுக்கு கண்டனம்.
 • தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட கோடிகணக்கான பணத்தை மீட்க வேண்டும்.
 • ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற உடனடியாக ஊதிய குழு நியமிக்கப்படவேண்டும்.
 • தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
 • மதுரவாயல்-துறைமுகம் சாலையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
 • நீட் தகுதி தேர்வை ரத்து செய்து மாநிலங்கள் ஏற்கனவே பின்பற்றிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
 • புதிய கல்விகொள்கையை மதிய அரசு கைவிடவேண்டும்.
 • கச்சதீவு புனித அந்தோனியார் கோயிலில் தமிழர்கள் சென்று வணங்கி வருவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
 • இலங்கை அரசால் கைதுசெயப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கப்படவேண்டும்.
 • சேலம் உருக்காலையை தனியார் மயமாகும் முயற்சியை மதிய அரசு கைவிடவேண்டும்.
 • கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 3500 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும்.
 • வார்த் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடும்  நிவாரணமும் வழங்கப்படவேண்டும்.
 • வாக்காளர் பட்டியலை சீரமைத்து விரைவாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்.
 • பொது விநியோகத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு உடனடி தீர்வு காணப்படவேண்டும்.
 • தமிழகத்தின் பாரப்மரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 • ஊழல் செய்வோரை தண்டிக்க லோக்பால் லோகாயுக்த சட்டங்களை நடைமுறை படுத்தவேண்டும்.

செயல் தலைவராக பொறுப்பேற்ற முக.ஸ்டாலின் பின்பு கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசிபெற்று கொண்டார்.