மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து

TN Images: 

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அவருடைய  வாழ்த்து செய்தியில்.

"நம்பிக்கை நிறைந்த வாழ்க்கையில் நம் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி தரும் ஆண்டாக ஒவ்வொரு புத்தாண்டும் அமைய வேண்டும் என்பதே என் விருப்பம். அப்படியொரு மனமகிழ்ச்சி நிரம்பியதாக இந்தப் புத்தாண்டு அமைய அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆங்கிலப் புத்தாண்டான 2017, தமிழக மக்களுக்கு அனைத்து வகையிலும் முன்னேற்றம் தரும் ஆண்டாக, அத்தகைய ஊக்கமும், உற்சாகமும் அளிக்கின்ற ஆண்டாகப் பிறக்கிறது என்றே எண்ணுகிறேன். கடந்த ஆண்டில் நடந்த இன்னல்கள் மறைந்து, இன்பம் பிறக்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையும். மாநிலமும், நாடும் வளர்ச்சி பெற்று "நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடன்" நடைபோட உங்களில் ஒருவனாக முன்னிற்பேன் என உறுதி கூறி, அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.