மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில்

இலங்கையில் காணப்படும் இந்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த ஒரு திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் காணப்படுகிறது.

மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் இலங்கையின் வடபாகத்தில் காணப்படுவதுடன் யாழ்பாணத்தில் இருந்து 15 கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கென சிறப்புகள் உண்டு இந்த ஆலயத்தின் வரலாற்றில் முக்கிய இடத்தினை மாருதபுரவல்லி என்னும் அரசியர் குதிரை முகம் நீக்கியதால் மிகவும் பிரபல்யமானதாகும்

இந்தியாவில் தமிழ் நாட்டில் மதுரை எனும் இடத்தை ஆட்சி புரிந்த மன்னர் உக்கிரப்பெருழகி இம் மன்னனின் மகள் மாருதப்புரவல்லி இவ் அரசி குதிரை முகத்துடன் காணப்பட்டதுடன் குண்ம நோயினாலும் வருந்தினாள். எல்லா வகையான வைத்தியர்களும் வைத்தியம் செய்தும் இவளுடைய நோய் தீர வில்லை.

சாந்தலிங்க முனிவருடைய வழிக்காட்டலின் கீழ் அரசி தென்னிந்தியாவில் இருந்து கீரிமலை வந்து நீராடி கந்தசாமி ஆலயத்தையும் வழிப்பட்டு வந்தார்.இந்நிலையில் இவருடைய நோய் நீக்கியதுடன் குதிரை முகமும் நீங்கி மகா பேரழகு பெற்று காணப்பட்டாள்.

இதன் பயனாக மதுரையில் இருந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக சிற்பாசிரியர்களையும் பொருட்களையும் கொண்டுவந்து இங்கு மாவிட்டப்புரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தனர். இந்த ஆலயம் இரு நூறு வருடங்களுக்கு மேற்பட்டதாகும்.போர்த்துகேயர் இலங்கை மீது படையெடுத்து இலங்கையை கைப்பற்றிய வேளையில் மத மாற்றும் முகமாக இந்து ஆலயம் அழித்து தேவாலயங்களை நிர்மாணித்தார்கள்.

அப்போது மாவிட்டப்புரம் கந்தசுவாமிகோவிலும் அழிக்கப்படது.அவ்வேளையில் ஆலயத்தில் இருந்த கந்தசுவாமி திருவுருவத்தை மக்கள் கிணறு ஒன்றினுள் மறைத்து வைத்தார்கள்.

போர்த்துகேயர் ஆட்சி முடிந்து ஒல்லாந்தர் ஆட்சி ஆரம்பிக்கப்பட்டதைதொடர்ந்து ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டு மீண்டும் கந்தசுவாமியின் சிலை ஸ்தாபிக்கப்பட்டு வழிப்பாடு இடம்பெற்றது.

இடைக்காலத்தில் மூலஸ்தானத்தில் வேல் வைத்து வழிப்பாடு இடம்பெற்றது.இன்றும் கூட கந்தசுவாமி வழிப்படுடன் மூலஸ்தானத்தில் வேலும் வைக்கப்பட்டு வழிப்பாடுவதையும் காணலாம்.

தீர்த்தம் : கீரிமலை கண்டகி தீர்த்தம்

முக்கிய விழாக்கள் : கொடியேற்ற திருவிழா தினத்தன்று கொடியேற்றத்திற்கு பதிலாக காம்போற்சவ திருவிழாக்கள் 25 நாட்கள் இடம்பெறுகின்றன. திருவிழாக்கள் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிவரை சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், ஆராதனைகள், பிராத்தனைகள், திருமுறை ஓதுதல், மகேஸ்வர பூஜை என்பன இடம்பெறுகின்றன. மேலும் முக்கிய நிகழ்வாக அருணகிரி நாதரின் திருப்புகழ் கானாமிதங்கலோடு ஷண்முகார்ச்சனைகளும் இடம்பெறுகின்றன

 

மேலும் படிக்க : இணுவில் கந்தசுவாமி கோயில் இணையதளம்