மாரி திரை விமர்சனம்

மாரி படம் உண்மையில் இன்னும் நன்றாக இருந்திருக்க வேண்டும். படத்தில் நடிகர் / நடிகை தேர்வு முக்கியம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு மாரி.

தனுஷை மட்டுமே நம்பி எடுக்க பட்டிருக்கும் படம் மாரி. பாவம் அவரும் எவ்வளவு தான் தாங்குவார். முழு படத்தையும் அவர் தோளில் வைத்துவிட்டார்கள் அட்லஸ் தூக்கும் பூமியை போல...!!!

மொத்தமாய் தனுஷை வீணடித்து விட்டார்கள். அவர் நடிப்பதற்கு ஏகமாய் இடங்கள் இருந்தாலும் படத்தின் நீளத்தை குறைத்து அவருடைய பாத்திரத்தை இன்னும் வலுப்படுத்தியிருக்கலாம்.!! அப்படி செய்யாமல் செக்கு மாடு சுற்றி வருவது போல் ஒரே இடத்தை சுற்றி வருகிறது கதை...!!! ஆனாலும் படம் மிக மெதுவாக தான் செல்கிறது. ரோபோ சங்கர் கூட்டணி நல்ல தேர்வு. அடி தாங்கி மற்றும் சனிக்கிழமை லூட்டி படத்தின் நகைச்சுவையை நகர்த்தி செல்ல உதவுகிறது.

எதை சொல்வது ? எப்படி சொல்வது என்று தெரியாமல் முழி பிதுங்கி போகும் அளவுக்கு ஏராளமாய் தொய்வு படத்தை ஆமை வேகத்திற்கு இட்டு செல்கிறது.

என்னதான் ஆர்பாட்டம் பண்ணாலும் ஆறுதலான ஒரு விசயம் தனுஷுக்கும் காஜல் அகர்வாலுக்கும் டூயட் இல்லாதது உண்மையில் நல்லதே. படத்தின் வேகத்தை இன்னும் மட்டு படுத்தியிருக்கும்.

மொத்தத்தில் மாரி பார்த்துவிட்டு வெளியே வந்தால் "மாரி" தெப்பமாய் சாலைகள்...!!! இயக்குனருக்கு மிகவும் கஷ்டமான படம் இதுவாக தானிருக்கும்...!!!