மாசு என்கிற மாசிலாமணி - திரை விமர்சனம்

மாஸ் fuse என்று கேட்டபிறகும் சூர்யா மற்றும் வெங்கட்பிரபுவுக்காக  படத்தை பார்க்க நேரிட்டது, தந்தை மற்றும் தம்முடைய குடும்பத்தைக் கொன்றவர்களைப் பழிவாங்குகிற தனயனின் பழையகதை.

காவல்துறைஅதிகாரி போல அறிமுகமகிறார்கள்  திருடன் சூர்யா மற்றும் பிரேம்ஜி. இவருவரும் சேர்ந்து செய்யும் திருட்டொன்றில் வகையாக மாட்டிக்கொண்டு தப்பிக்கும் முயற்சியில். இருவரும் விபத்தில் சிக்கி பிராம்ஜி இறக்க சூர்யா மட்டும் தப்பிக்கிறார்.

விபத்திற்கு பிறகு  சூர்யாவின் கண்களுக்கு ஆவிகள் தெரியத்தொடங்குகின்றன. முதலில் அந்தாவிகளை கடு பயப்படும் சூர்யா பின்னர்  அதே ஆவிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு  பேய்ஓட்டும் தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார். ஒருகட்டத்தில் சூர்யாவின் உருவத்திலேயே அது யாரென்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.

சூர்யா தன் வேலையில் எந்த குறையும் வைக்கவில்லை என்றே சொல்லலாம். மாஸ் பாத்திரத்தில் ஆவிகள் கண்களுக்குத் தெரிந்தவுடன் அவற்றை வைத்துத் தன் புது தொழில் செய்வது திரைக்கு புதுசு மாடுமல்ல கொஞ்சம் கலகலப்பும். நயன்தாராவை அவர் கால்ஷீட் கிடைத்ததற்காக மட்டும் பயன்படுத்தி இருகின்றனர், அவருக்குப் படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை. தொடக்கத்தில் சும்மா வந்துபோகிறவராகவே இருக்கிறார். மற்றொரு நாயகி பிரணிதாவிற்கு படத்தில் நடிக்க கொஞ்சம் வாய்ப்பு கிடைத்திருகிறது

ஆரம்பம் முதல் கடைசிவரை வரை பிரேம்ஜி என்ன சொல்ல முடியல..., காவல்துறைஅதிகாரியாக பார்த்திபன், தொழிலதிபராக சமுத்திரக்கனி, மத்தியஅமைச்சராக ஜெயப்பிரகாஷ், என ஒரு வில்லன் கூட்டம்,  நிறைவேறாத ஆசைகளைக் கொண்ட ஆவிகளாக கருணாஸ், ஸ்ரீமன், நான்கடவுள்ராஜேந்திரன் ஆகிய ஆவிகளின் முன்கதை மற்றும் அவற்றினுடைய ஆசைகளை சூர்யா நிறைவேற்றி வைக்கிற காட்சிகளில் மக்களின் அடிப்படைத்தேவைகள் கூட பெரியஆசை போல மாறிவிட்டதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சூர்யா புது அழகோடு தெரிகிறார் ,ஆர்டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு கைகொடுத்த அளவிற்கு யுவனின் இசை இல்லை.

மொத்தத்தில் வெங்கட்பிரபு தன்  நண்பர்களை வைத்து ஏதோ புதுசாக செய்ய முயற்சி செய்திருக்கிறார் அதற்காக அவரை பாராட்டலாம் 

மாஸ் fuse இல்லை.