மஹாலஷ்மி மந்திரம்

அனைவருக்கும் என் அன்பார்ந்த   வந்தனங்கள் ..
வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்கள் அனைவருக்கும் நல் ஆரோக்கியத்துடன் குன்றாத செல்வங்களையும் அளிக்குமாறு பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே !
விஷ்ணு பத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!

ஸ்ரீலக்ஷ்மி வைகுண்டத்தில் மஹாலக்ஷ்மியாகவும் ..
இந்திரனிடத்தில் சொர்க்கலக்ஷ்மியாகவும் ..
மன்னர்களிடத்தில் ராஜலக்ஷ்மியாகவும் ..
வீரர்களிடம் தைரிய லக்ஷ்மியாகவும் ..
குடும்பத்தில் கிரகலக்ஷ்மியாகவும் விளங்குகின்றாள் ..

மஹாலக்ஷ்மி பாற்கடலில் தோன்றியவள் .. உப்பின் பிறப்பிடம் கடல் .. எனவே வெள்ளிக்கிழமைகளில் இல்லத்திற்கு உப்பு வாங்குதல் மிகவும் விசேஷம் ..

அன்னையைப் போற்றுவோம் .. அன்னையின் திருவருளும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோம் ..
ஓம் மஹாலக்ஷ்மியே நமோஸ்துதே ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..