போலி கணக்கு தொடங்கி 34 கோடி ரூபாய் டெபாசிட் சிக்கலில் தனியார் வங்கி.

டெல்லியில் வங்கியில் போலி கணக்குகள் தொடக்கி 34 கோடி  ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால்  அந்த  மானேஜரை பண மோசடி வழக்கில் அமலாக்கப்பிரிவு கைது செய்து விசாரணை செய்து வருகிறது.

நவம்பர் மாதம் 8-ஆம் தேதியிலிருந்து செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்காக  காலஅவகாசம் டிசம்பர் 30–ந் தேதிவரை கொடுக்கப்பட்டது, இந்த அறிவிப்பிற்கு பிறகு இதையே சம்பாதிக்கும் தருணமாக நினைக்கும் வங்கி அதிகாரிகள் தங்களுடைய அதிகாரங்களை  பயன்படுத்தி  சட்டவிரோதமாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவங்களும்  அங்காங்கே நடைபெற்று கொண்டிருகிறது. இதை எதிர்பார்த்துதான் மத்திய அரசு, டெபாசிட் செய்த பணம் முழுவதும் எடுக்கமுடியாதபடி கட்டளையிட்டுள்ளது. மேலும் தொடர்ந்து  மத்திய அரசு அதிகாரிகளை கொண்டு சோதனைகள் மேற்கொண்டு வருகின்றது. இந்த அதிரடி சோதனைகளில் சட்டவிரோதமாக வங்கிகளில் டெபாசிட் செய்த விவரம் அனைத்தும் வெளியாகி வருகிறது.

 கடந்தவாரம் டெல்லியில் கோடக் வங்கி கிளையில் சோதனை செய்தபோது அங்கே  9 போலி கணக்குகள் தொடங்கப்பட்டு  34 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 

இப்போது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கில் அமலாக்கப்பிரிவினர் அந்த தனியார் வங்கியின் மானேஜரை கைது செய்துள்ளனர். அவரை கோர்ட்டில் ஒப்படைத்து, காவலில் எடுக்கப்போவதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள்  தெரிவித்து உள்ளனர்.

ஆனால் அந்த தனியார் வங்கி போலி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை மறுத்து உள்ளது. தங்கள் வங்கியில் போலி வங்கி கணக்கும் எதுவும் பராமரிக்கப்படவில்லை என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.