பீம் செயலி எதிர் காலத்தில் மிகச்சிறந்த செயலியாக மாறும் - பிரதமர்

இன்று புதுடில்லியில் நடந்த  ‛டிஜி தன் மேளா'  என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  கலந்துகொண்டு மொபைலுக்கான புதிய “பீம்” என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மின்னணு சேவை மூலம் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கப்பட்டன.  இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் இந்த செயலிக்கு அம்பேத்கர் பெயர் (பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்) சூட்டப்பட்டுள்ளதாக அவர் குறிபிட்டார். அம்பேத்கர் இந்தியாவின் சிறந்த பொருளாதார மேதை என குறிப்பிட்ட அவர். நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும், ரிசர்வ் வங்கி வளர்ச்சியிலும் முக்கியபங்கு வகித்தார் என குறிப்பிட்டார். அம்பேத்கர் Columbia University  மற்றும் London School of Economics இரண்டிலும் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் நம் தேசதின் வளங்களை சுரண்டும் பெருச்சாளிகளை பிடிக்கத்தான் என்றார்.  

மேலும் அவர் பேசுகையில்,

 • அவரது பிறந்த நாளில் (14 April 2017)  மின்னணு பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கு ஒரு கோடி பரிசு அளிக்கப்படும்.
 • பண்டமாற்று முறையில் இருந்த நாம் இப்போது பங்குச்ந்தையில் மின்னணு வர்த்தகாதில்  செய்து சாதனை படைத்து வருகிறோம்.
 • “பீம்” செயலி விரைவில் செயலுக்கு வரவுள்ளது. இதை ஸ்மார்ட் போனிலோ அல்லது இணையதள வசதி இல்லாத போனிலோ கூட  பணத்தை பரிவர்த்தனை மேற்கொள்ளல்லாம்.
 • டெபிட் கார்டு, e-pyment போல் இதுவும் எளிதாக இருக்கும்.
 • பாரத ரத்னா அம்பேத்கரின் புகழ் இந்திய பொருளாதாரத்தில் இந்த செயலி மூலம் உச்சியை அடையும்.
 • படிக்காதவர்களை கைநாட்டு என்று சொன்ன காலம் மிக விரைவில் மாறும். இனி உங்கள் கைரேகைதான் உங்கள் வங்கி, உங்கள் அடையாளம் மற்றும் உங்கள் வர்த்தகம்.
 • ஏற்கனவே 100 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது 100 கோடி மொபைல் போன்கள் உள்ளன. அடுத்து வரலாறு படைப்பது தான்.
 • இது பரம ஏழையையும் முனேற்றம் காணச்செய்யும்.
 • எனனுடைய முயற்சிக்கு துணை நிற்கும் மீடியாக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 • ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டடுள்ளனர். என்றாலும் எனக்கு ஆதரவு வழங்கியதற்காக நன்றி தெரிவித்துகொள்கிறேன்.
 • படிக்காத பாமரனும் மின்னணு வாக்கு எந்திரங்களை பயன்படுத்துவதை கண்டு  உலக நாடுகள் ஆச்சரியமடைந்துள்ளது.
 • சிலர் அவநம்பிக்கையோடு இருகின்றனர், அவர்கள் எழுவதே அவனம்பிக்கையோடுதான். ஆனால் மக்காள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர்.
 • இந்திய மக்கள் நேர்மையாக வாழ விரும்புபவர்கள் என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளனர்.
  நுகர்வோருக்கும், வணிகர்களுக்கும் பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  
 • இந்த முயற்சி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
 • அனைவரும் பயன்பெறும் வகையில் மின்னணு பரிவர்த்தனைக்கு ஆகும் தொகை குறைக்கப்பட்டுள்ளது.
 • சாதாரண போன்களில் e-payment செலுத்தும் வகையில் பீம் செயலி இருக்கும். இது உலகிலேயே மிகச்சிறந்த செயலியாக உருப்பெறும்.
 • “பீம்” செயலி புரட்சியை ஏற்படுத்தும்.  ஏற்கனவே ஓட்டுப்பதிவில் மின்னணு பயன்படுத்தி நாம் வெற்றி பெற்றுள்ளோம்.
 • ஒரு காலத்தில் 2 ஜி ஊழலை பற்றி பேசி கொண்டிருந்தனர். ஆனால் இப்போது பண வரவு குறித்து பேசி கொண்டிருகின்றனர்.
 • மின்னணு பண பரிவர்த்தனை இல்லாததால் கடந்த காலத்தில் ஊழல் நடந்திருக்கிறது.
 • அனைவரும் மின்னணு பணவர்த்தனைக்கு அனைவரும் மாறுங்கள்.
 • மின்னணு பணவர்த்தனை மட்டுமே நம்மை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும்.

 இவ்வாறு அவர் பேசினார்.