பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - 2015, மகளிர் இரட்டையர் காலிறுதி போட்டியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி தோல்வி

பிரான்சில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் காலிறுதி போட்டியில் (Indo-Swiss pair) சானியா - ஹிங்கிஸ் ஜோடி தோல்வியை தழுவியது.  

இரட்டையர் தர வரிசைப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள மேட்டக் சாண்ட்ஸ் மற்றும் சபரோவா ஜோடி, முதலிடத்தில் உள்ள சானியா - ஹிங்கிஸ் ஜோடியின் கனவைத் தகர்த்தது, சானியா - ஹிங்கிஸ் ஜோடி போட்டியில் 5-7 மற்றும் 2-6 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

சானிய மிர்சா மூன்று முறை கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் வாகையர் பட்டம் பெற்றுள்ளார். 2009 ஆசுத்திரேலிய ஓப்பன் & 2012 பிரெஞ்சு ஓப்பனில் மகேசு பூபதியுடன் இணைந்தும். 2014ம் ஆண்டு அமெரிக்க ஓப்பன் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரேசிலின் புருனோ சோரெசுடன் இணைந்தும் வெற்றி பெற்றார்.