பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரரை வீழ்த்தி னார் வாரிங்கா

பாரிஸ், ஜூன் 3-

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் வீரர் ஸ்டான் வாரிங்கா பெடரரை கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முதன் முறையாக வெற்றி பெற்றார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில், 2ம் தரநிலை வீரரான பெடரர், 8ம் தரநிலையில் உள்ள சக நாட்டு வீரரும் டேவிஸ் கோப்பையில் தனக்கு இணையாக விளையாடியவருமான ஸ்டான் வாரிங்காவோடு மோதினார் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெடரருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் விளையாடிய வாரிங்கா, 6-4, 6-3, 7-6(7/4) என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார்.

இவர்கள் இருவரும் இதற்கு முன் 19 ஆட்டங்களில் மோதியுள்ளனர் அவற்றில் 2 முறை மட்டுமே பெடரர் தோல்வியைத் தழுவியுள்ளார். 

இதுவரை 17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பெடரர், ஆரம்பம் முதலே வாரிங்காவின் சர்வீஸ்களை முறியடிக்க முடியாமல் தடுமாறினார். ஆட்டமுடிவில் தன் இந்தப் போட்டியில் குறைந்தது முப்பது தவறுகள் செய்திருப்பதாகவும் வாரிங்கா ஒன்று மட்டுமே செய்துள்ளதாகவும் கூறி அவரை பாராட்டினார்.

வாரிங்கா தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 2014 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் (2014 Australian Open) நடாலை விழ்த்தி பெற்றார், இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார், அரையிறுதியில் ஜோ-வில்பிரட் டிசோங்காவை சந்திக்க உள்ளார்.