பிட்ஸ் பிலானி மாணவர்களின் கனவுக் கல்வி நிறுவனம்

தொழில்நுட்ப கல்வியை தேர்ந்தடுக்கும் மாணவர்களின் கனவுக் கல்லூரிகளில் BITS Pilani முக்கியமானதாகும். BITS (Birla Institute of Technology & Science) இந்தியாவின் மிக முக்கிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்று. இது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிலானியில் அமைந்துள்ளது. கோவா பெங்களூரு மற்றும் துபாயில் இதன் வளாகங்கள் அமைந்துள்ளன. இந்தியாவில்  அடுத்த  வளாகம் விரைவில் ஐதராபாத்தில் அமைய உள்ளது ஐ.ஐ.டி பட்டதாரிகளுக்கு இணையான சம்பளத்தில் பிட்ஸ் பிலானி பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு நிச்சயம். குறைந்த கல்வி கட்டணம், வேலைவாய்ப்பு உத்தரவாதம், நல்ல கல்விச்சூழல் இதன் சிறப்பு. 

1929ல் கான்ஷியாம் தாஸ் பிர்லா என்பவரால் இன்டர்மீடியேட் கல்லூரியாக இந்த கல்விநிறுவனம் தொடங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக வளர்ந்து தொழில்நுட்ப கல்வி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

BITS-சில் சேர பிட்ஸ்சாட் (BITSAT) என்ற பெயரில் தனியான நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடக்கிறது. இது 3 மணி நேரம் கொண்ட ஆன்லைன் தேர்வு. சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு +2  முடித்தவர்களும் தற்போது +2 படித்துக் கொண்டிருப்போரும் மட்டுமே நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். +2  தேர்வில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடிக்கும் மாணவர்கள் நேரடியாகச் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். மே மாதத்திலிருந்து  ஜூன் வரை நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இதற்கு www.bitsadmission.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  இதில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் லாஜிக்கல் ரீசனிங் அடிப்படையில் கேள்விகள் அமைந்திருக்கும்.

BITSAT தேர்வு எழுத பிளஸ் 2வில் இயற்பியல், கணிதம், வேதியியலில் குறைந்தபட்சம் 75%  சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம். முழுக்க முழுக்க தகுதியின் அடிபடையிலேயே இங்கு சேர்க்கை நடைபெறுகிறது.

பி.இ., பி.பார்ம்., எம்.எஸ்சி., எம்.ஏ., எம்.இ., எம்.பார்ம்., எம்.பில்., ஆகிய பட்டப்படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன. இது தவிர நான்கு ஆண்டு எம்.எம்.எஸ்., படிப்பும் உள்ளது. எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ருமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், பார்மசி, சிவில், மெக்கானிக்கல், வேதியியல், உயிரி அறிவியல், பொருளாதாரம், கணிதம், அறிவியல், பைனான்ஸ், இன்ஜினியரிங் டெக்னாலஜி, ஜெனரல் ஸ்டடீஸ், இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆகிய பிரிவுகளில் படிப்புகள் உள்ளன.

  • சாப்ட்வேர் டெவலப்மென்ட் அண்டு எஜுகேஷனல் யூனிட்  டெக்னாலஜி 
  • பிசினஸ் இங்குபேடர்  சென்டர் பார் ஆந்ரபிரனார் லீடர்ஷிப்
  • சென்டர் பார் ரோபாட்டிக்ஸ் அண்டு இன்டலிஜென்ட் சிஸ்டம்ஸ்
  • சென்டர் பார் டெசர்ட் டெவலப்மென்ட் டெக்னாலஜிஸ்
  • சென்டர் பார் உமன் ஸ்டடீஸ் 
  • ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங்
  • புரபஷனல் டெவலப்மென்ட் சென்டர்
  • சாப்ட்வேர் இன்ஜினியரிங் ரிசர்ச் சென்டர்

போன்றவை பிட்ஸ்.,சில் செயல்படும் முக்கிய மையங்களில் சில.

பிலானியில் இருக்கும் பிட்ஸ் மட்டும் ஏறத்தாழ 1.3 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் 11 மாணவர்களுக்கான ஹாஸ்டல்களும் 1  மாணவிகளுக்கான ஹாஸ்டலும் உள்ளது.

2006ல் தொடங்கப்பட்ட கோவா பிட்ஸ் வளாகம் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் 14 மாணவர்களுக்கான ஹாஸ்டல்களும் 2  மாணவிகளுக்கான ஹாஸ்டலும் உள்ளது. 2 ஆயிரத்து 200 பேர் வரை அமரக்கூடிய ஆசியாவின் மிகப்பெரிய ஆடிட்டோரியமும் இங்கு அமைந்துள்ளது.

BITSMUN, BOSM, Interface, APOGEE, Oasis, TechBazaar, Rocktaves, BITS Spark என்று பல  கருத்தரங்குகள், பயிலரங்குகள், கலாசார மற்றும் தொழில்நுட்ப விழாக்களும் நடத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் பண்ணவும்.

BITS Pilani