பள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்ற

தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலை பள்ளிவரை முழுஆண்டு தேர்வு முடிந்ததும் மாணவ மாணவியர்கள்  பெருமூச்சுவிட்டு  தேர்வுக்கான முடிவுகளை எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

இடையில் 6 முதல் 10 வாரம்வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டும். இந்த விடுமுறை நாள்களை குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபப்பருவத்தை அடையவிருக்கும் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் விடலைப்பருவத்தினர் தான் எப்படிக் கழிக்கவேண்டும் என முக்கியமாக கவனிக்கவேண்டும். அவர்கள் தமது கல்வி அறிவு சிறக்கப் பயன்படும் வகையில் பயன்படுத்த வேண்டும்.

பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பதென்று விடுமுறை என்று வீட்டிலேயே முடங்கிக் கிடந்தது முழுநேரமும் டி வி, வீடியோ கேம், டேப்லட், லேப்டாப் , என்று மூழ்கி புத்தியை மழுங்கடிகாமல். மாலை நேரங்களில் நண்பர்களுடன் தெருவில் சென்று விளையாடலாம். பலவகை விளையாட்டு போட்டிகள் நடத்தலாம். இது உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தரும்.

பெற்றோர்கள் உறவினர்களுடன் வங்கி மற்றும் அரசு சம்பந்தமான வேலைகளுக்கு கூடச் சென்று அந்த வேலைகளை எப்படி செய்கிறார்கள் யாரை எப்படி அணுகுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கில மொழித்திறனை (English language skill) வளர்த்துகொள்ள முயற்சி செயுங்கள்.

பேச்சு ஆங்கிலத்தை ( Spoken English ) வளர்த்துக் கொள்வதற்கான எளிய குறிப்புகள்:

  • பேச முற்படும் முன் நிறைய ஆங்கிலப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள். எடுத்துக்காட்டுக்கு, கிரிக்கெட் வர்ணனை, தொலைக்காட்சிச் செய்திகள். பொருள் புரியாவிட்டாலும் ஓசைகள், சொற்களுக்குப் பழக்கப்பட உதவும்.
  • தமிழ் தெரியாத பிற மொழி நண்பர்களிடம் பேச்சு கொடுத்துப் பழகுங்கள். இந்தச் சூழ்நிலைகளில் உங்கள் பேச்சுப் பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள். நீங்கள் பேசுவது அவருக்குப் புரிந்தாலே வெற்றி தான்.
  • நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு வாடிக்கையாளர் சேவையைத் தொலைபேசியில் அழைக்கும் போது ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு இருந்தால் பேசிப் பாருங்கள்.

2. தொடர்புத் திறனை (Communication skill) வளர்ப்பது

  • வேலைவாய்ப்பு பெற மிகமுக்கியத் தகுதியாகக் கருதப்படுவது ‘தொடர்புத் திறன்’ (Communication skill). இந்தத் தொடர்புத் திறனை வளர்த்துக் கொள்ள மிகமுக்கியத் தேவை தைரியம். தைரியமாக நீங்கள் நினைக்கும் கருத்துகளைப் பிறருக்குச் சொல்லப் பழகுங்கள்.
  • தொடர்புத் திறநை வளர்க்க கூர்ந்து கவனித்தால், யார்யாரிடம் எப்படி பேசவேண்டும், உடல் அசைவுகள் எவ்வாறு இருக்க வேண்டும், உங்கள் கருத்தை எவ்வாறு கூறவேண்டும். குறிப்பெடுத்து பேசுவது எப்படி, ஒரு குழுவில் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளல்லாம்.

3. கணினி அறிவை வளர்த்துக் கொள்ளலாம்:

  • தற்போது பள்ளிப்படிப்பு படிக்கவே கணினி அறிவு (Computer knowledge) அவசியமாகின்றது. எனவே கணினியில் குறிப்பாக அடிப்படை மென்பொருள் பயன்பாடுகளை பழகிக்கொள்ளவேண்டும் உதாரணமாக-MS Office . Internet browsing, google Search, Email போன்றவற்றை கற்றுக் கொள்ளுங்கள்.

 

  • இன்டெர்னெட் பயன்படுத்தும் பிள்ளைகளின் பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். நம் சமுதாயத்தில் உள்ளதுபோல் இணையதளத்திலும் நல்ல வியஷயங்களுக்கு இணையாக கெட்ட விஷயங்களும் நிரம்ப கிடக்கின்றன. அதற்காக இந்தகாலத்தில் இன்டெர்னெட்டே வேண்டாம் என ஒரேடியாக ஒதுக்கிவிட முடியாது. அது நம் பிள்ளைக்கு பின்னடைவாக நேரிடும் எனவே பெற்றொர்கள்தாம் தம் பிள்ளைகளை நெறிப்படுத்தி பிள்ளைகளுக்கு  நல்லமுறையில் இன்டெர்னெட்டை பயன்படுத்தும் விதத்தை சொல்லிகொடுக்க வேண்டும்.

10 மற்றும் +2 -ஆம் வகுப்புகள் படிக்கப் போகும் மாணவர்களுக்கு:-

மொத்த விடுமுறையையும் வீணாகக் கழித்துவிடாமல் ஒரு பத்து நாள் இடைவெளிக்கு பிறகு பொதுத் தேர்விற்குப் படிக்க ஆரம்பித்து விடுங்கள்.  9-ஆம் வகுப்பு முடித்து, 10-ஆம் வகுப்புக்குச் செல்லவிருக்கும் மாணவர்கள் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்விற்கும். +1 முடித்து +2 செல்லவிருக்கும் மாணவர்கள் +2 வகுப்புப் பொதுத் தேர்விற்கும் தயாராகுங்கள்.  +2 வகுப்புப் படிக்கவிருக்கும் மாணவர்கள்  தேசிய அளவில் மருத்துவம், பொறியியல் படிக்க நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுங்கள்.

+2 -ஆம் வகுப்புப் படிக்கப் போகும் மாணவர்களுக்கான போட்டித் தேர்வுகள் :

    IIT-JEE – இந்தத் தேர்வு IIT, IISc – ல் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தப்படும் தேர்வாகும். +2-ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.

    AIEEE – NIT  மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களில் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தப்படும் தேர்வாகும். +2-ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.

    AIPMT –  மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிக்க நடத்தப்படும் தேர்வு. உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியல் மற்றும் இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.

    HSEE – IIT -யில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு M.A. படிப்பிற்கான தேர்வு. அனைத்துப் பிரிவு மாணவர்களும் எழுதலாம். குறிப்பாக Arts குரூப் படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வின் மூலம் IIT-யில் படிக்கலாம்.

மாணவர்களே!

நேரத்தை வீணாக்காமல் இப்போதே போட்டித் தேர்வுகளுக்கும், பொதுத் தேர்வுகளுக்கும் தயாராகுங்கள்.  தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையைக் குப்பையில் போடுங்கள். எந்தத் தேர்வையும் சந்தித்துச் சாதிக்க நம்மோடு இறைவன் இருகின்றான். இறைவன் மீது நம்பிக்கைவையுங்கள். கடினமாக உழைத்துப் படியுங்கள். நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்