பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி?

உருண்டைக்கு தேவையான பொருள்கள்:
கடலை பருப்பு - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு

குழம்புக்கு தேவையான பொருள்கள் :
சாம்பார் வெங்காயம் - 100 Gram
தக்காளி - 2
தேங்காய் துருவல் - 1/2 கப்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சாம்பார் தூள் / (மிளகாய் தூள்+மல்லிதூள்+மஞ்சள்தூள்) - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டி ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
புளி - நெல்லிக்காய் அளவு

இரண்டு மணி நேரம் ஊறவைத்த கடலை பருப்பை நீரை இருத்து பிறகு அதில் சோம்பு,  பெருங்காயம், காய்ந்த மிளகாய்,   கறிவேப்பிலை,  தேவையான அளவு உப்பு சேர்த்து வடைக்கு அரைக்கும் பதத்தில் கரகரப்பாகவும்,  கெட்டியாகவும் அரைத்து கொள்ளவும்

குறிப்பு:- நைசாக அரைத்துவிட்டால் உருண்டை இருகி கெட்டியாகிவிடும்.

பாதி பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்த கடலை மாவுடன் சேர்த்து( முருங்கை கீரை இருந்தால் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்) உருண்டைகளாக உருட்டவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சாம்பார் வெங்காயத்தை வதக்க வேண்டும் பிறகு அதனோடு தக்காளி ஒன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆற விடவும். நன்றாக ஆறியவுடன் சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸ்யில் அரைக்கவும்.  அரைத்த கலவையை புளி தண்ணீரில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

மற்றொரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பூண்டு, மீதியுள்ள வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து  வதக்கவும். பிறகு சாம்பார் தூளையும் சேர்த்து வதக்கவும் இதனோடு குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

இரண்டு மூன்று கோதிக்கு பிறகு குழம்பில் எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து  உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒன்றின் பின் ஒன்றாக போடவும். உருண்டை முக்கால் பதம் வெந்ததும் கரைத்து வைத்திற்கும் மசாலா புளிக்கலவையை சேர்க்கவும். உருண்டைகளை திருப்பி விட்டு மேலும் 5 நிமிடம் வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.

 கடைசியாக சிறிது கொத்தமல்லி இலையை மேலே தூவிவிடவும்.