நொண்டி விளையாட்டு

நம் குழந்தைகள் தொலைத்துநிற்கும் விளையாட்டுகளில் இந்த  விளையாட்டில் எத்தனைபேர் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். சாட் பூட் த்ரீ போட்டு கடைசியாக வருபவரை நொண்டியடித்துவர  தேர்ந்தெடுத்துக் கொள்வர். ஓடுபவர்கள் குறிப்பிட்ட வட்டத்திற்குள் ஓடவேண்டும். நொண்டியடித்து வருபவர் ஓடுபவர்களைத் தொட வேண்டும். தொடர்ந்து நொண்டியடிக்க முடியாவிட்டால் நடுவிலுள்ள சிறு வட்டக் கோட்டினுள் காலூன்றி இளைப்பாறிக் கொள்ளலாம். இரண்டு மூன்று வகைகளில் நொண்டி விளையாடப்படுகிறது.

இதேபோல் பாண்டி விளையாடும் நொண்டி நொண்டி விளையாடும் விளையாட்டாகும் இதில் தரையில் 7 கட்டம் வரைந்து ஒரு சில்லு ஓட்டை முதல் கட்டத்தில் போட்டு அதை நோன்டிசென்று எடுத்துவருவர்கள், அடுத்து இரண்டாவது கட்டத்தில் போட்டு மீண்டும் நொன்டிசென்று எடுத்துவரவேண்டும் இவ்வாறு 9 கட்டத்தையும் நிறைவுசெய்யவேண்டும்.
 ஒவ்வொருமுறையும் சரியான அடுத்தடுத்த சரியான கட்டத்தில் போடவேண்டும். கட்டம் மாறி விழுந்தாலோ நோடிசெல்லும்போது கோட்டை மிதித்தாலோ அவுட்டாகிவிடுவர்.

. இது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி ஆகும்.. நொண்டி விளையாட்டு குழந்தைகளின் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்து, அவர்களின் சோம்பேறித்தனத்தை குறைக்கிறது. இது கால்களுக்கு இடையே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இழப்பில் ஈடுகட்டும் ஆற்றலைத் தருவதோடு, இந்த விளையாட்டு எப்படியாவது அவர்களது இலக்கை தொட்டுவிடவேண்டும் என்று போராடுவார்கள். இது நம் குழந்தைகளுக்கு தனம்பிக்கையை வளர்க்ககூடியதாகும். மேலும் இப்படி சக குழந்தைகளோடு  விளையாடுவதால் சமுதாயத்தில் அடுத்தவர்களோடு எப்படி பழகவேண்டும், விட்டுகொடுக்கவேண்டும், என்ற தெளிவும் கிடைக்கும். மாறாக மொபைல் போண், டேப்லெட், கம்பியுட்டரில் விளையாடும் விளையாட்டுக்களால் மன உளைச்சலும், கண் பாதிப்பும் தான் மிச்சம். நீங்கள் நகர்புறதில் இருந்தாலும் சரி, கிராமப்புறத்தில் இருந்தாலும் சரி நம் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்தெடுப்பது நமது கடமையாகும் எனவே உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது உங்கள் குழந்தைகளோடு அருகிலுள்ள குழந்தைகளை சேர்த்து ஏதாவது ஒரு பாரம்பரிய விளையாட்டை கற்றுகொடுங்கள் அது அவர்களுக்கும் ஒரு மாற்றமாக இருக்கும்.