நாளை பொதுக்குழு கூடவிருக்கும் நிலையில் பொன்னையன் பேட்டி

இன்று அதிமுகவை சேர்ந்த பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்தார் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பின்வருமாறு விடையளித்தார்.

சசிகலா போதுசெயலாலாராக வேண்டுமென அதிமுகவை சேர்ந்தவர்கள் வலியுரிதிவருகின்றனரே அவர் ஒத்துகொண்டாரா என்ற கேள்விக்கு.

ஜெயலலிதாவோடு அவர் இணைந்து பணியாற்றி வந்ததால் அவரே அப்பொறுப்புக்கு வரவேண்டும் என்று கட்சியின் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்  சசிகலா இதுவரை எந்த பதிலும் தரவில்லை என்று கூறினார்.

சசிகலா பொதுகுழுவில் கலந்துகொள்வாரா என்ற கேள்விக்கு அவர் கலந்துகொள்வதால் எந்த பிரச்சனையும் இல்லை என்றார் மேலும் அவர் கலந்து கொண்டாலும் இல்லாவிட்டாலும் அவரை பொதுசெயலாலாராக ஆக்கும் சர்வ அதிகாரம் பொதுக்குழுவிற்கு உண்டு என்றார்.

சசிகலாவிற்காக விதிகள் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு பொதுக்குழுவிற்கு அணைத்து அதிகாரமும் இருப்பதாக கூறினார் அவர் பதிலைப் பார்த்தால் விதிகள் மாற்றப்படும் என்றே தெரிகிறது.

உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் சசிகலாவை போதுசெயலாலாராக அறிவிக்கும் முடிவு சரியாக இருக்குமா என்ற கேள்விக்கு. உச்சநீதிமன்றத்தில் ஆணை இருந்தால் மட்டுமே பொதுக்குழுவை கட்டுபடுத்துமே தவிர வழக்கு நிலுவையில் இருப்பதால் பொதுக்குழுவை கட்டுப்படுத்தாது என்றார்.

அதிமுகவிலிருந்து வெளியேறியுள்ள ஆனந்தராஜ் சசிகலா போதுசெயலாலாராக இது சரியான தருனம்மில்லை என்று கூறியிருந்ததற்கு ஏதாவது கருதுண்டா என்ற கேள்விக்கு அது பொதுக்குழுதான் முடிவுசெய்யமுடியும், முடிவுசெய்யும் என்று கூறினார்.

ஜெயலலிதாவை தேர்ந்தடுக்கும்போது நிரந்தர பொதுசெயலாளர் என்று கூறுவார்கள். நாளை தேர்ந்தெடுக்கும் பொதுசெயலாலருக்கும் இது பொருந்துமா என்ற கேவிக்கு. அது ஜெயலலிதாவின் மீது இருந்த அன்பின் காரணமாக சொல்லப்பட்டது, கட்சியின் விதியல்ல என்று கூறினார்.

பொதுசெயலாளர் தேர்ந்தெடுக்கும்பொது ஒன்னரை கோடி தொண்டரின் முடிவு எடுதுத்கொள்ளப்படுமா அல்லது கட்சியின் நிர்வாகிகள் மட்டும் முடிவு செய்வார்களா என்ற கேள்விக்கு.

பொதுக்குழு முடிவுசெயும், தேவையான நேரத்தில் கட்சியின் தொண்டர்களின் கருத்தை கேட்பதற்கு கட்சியின் விதியில் இடம் இருப்பதாகவும் கூறினார்.

இன்று காலை அதிமுகவை சேர்ந்த சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதைப் பற்றி கேள்வி எழுப்ப, அது உணர்ச்சிவசப்பட தொண்டர்களால் நிகழ்ந்தது என்றும் பிடிக்காத ஒருவர் அங்கே வந்து பிரச்சனையை கிளப்ப முயலும்போது இவ்வாறு நடப்பது இயற்கையான ஒன்றுதானே என்று கேள்வி எழுப்பினார்.

ஆரம்பத்தில் சசிகலா முதல்வராகவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது ஆனால் நாளாக ஆக அந்த பேச்சு குறைந்துள்ளதே? என்ற கேள்விக்கு.

மேலும் நாளை நடக்கும் பொதுகுழுவில் போதுசெயளாலரை மட்டுமே தேர்ந்தேடுக்க போவதாகவும் வேறெதுவும் நடைபெற வாய்பில்லை என்றும் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சர்ச்சைகள் உருவாகி கொண்டிருப்பதைப் பற்றி பேசுகையில் திரும்பவும் மார்புசளியிளிருந்து ஆரம்பிக்க நிருபர்கள் கிளம்ப தயாராகிவிட்டனர்.