
மருத்துவக் குணங்கள்:
தூக்கம் இன்மை மற்றும் தூக்கம் பிரச்சனையாக உள்ளவர்கள், காட்டுக் கொடித்தோடையின் இலையையும் கல்யாணமுருங்கை இலையும் நிழலில் உலரவைத்து தேநீராக்கி குடிக்க உறக்கம் சீராகும்.
காட்டுக் கொடித்தோடையின் சமூலத்தை கைப்பிடியளவு எடுத்துகொண்டு 200 ml நீர் சேர்த்து 100 ml ஆக வரும் வரை கொதிக்கவைத்து பின் நான்கு ஆறவைத்து கஷாயமாக்கி காலை மாலை என இருவேளை குடித்துவர குடற்புண் குணமாகும் குடல்புழுக்களை வெளியேற்றும் .
பழுக்காத பழத்தில் cyanide உள்ளதால் இதை பழுத்தபின்புதான் சாப்பிடவேண்டும்.
இதன் சமூலத்தை உலரவைத்து பொடியாகி வைத்துகொண்டு திரிகடுகம் சேர்த்து கொதிக்கவைத்து உட்கொள்ள சளித்தொல்லை மற்றும் இருமலுக்கு நல்மருந்தாகும்.
கைபிடியளவு இலையை இடித்து பிழித்து சாறெடுத்து குடிக்க பெண்களுக்கு கருப்பை கோளாறுகளை நீக்கும்.
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதன் வேரை கஷாயமாக்கி குடிக்க நாளடைவில் குணமாகும்.
இதன் இலைசாரை காயங்கள் மீது தடவ காயங்கள் குணமாகும்
குணமாகும் நோய்கள்: