தமிழகத்தில் ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலாவின் மீது அதிமுக தொண்டர்களிடையே கடும் கோபம் இருந்தது. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வரும்போதே தொண்டர்கள் அதன்களுடைய ஆத்திரத்தை வெளிபடுத்தினர். ஏன் பல இடங்களில் அவரது படத்தை சுமந்து நின்ற போஸ்டர்களும், பாணர்களும் கிழிதெறிந்து கூட தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
தொண்டர்களின் உணவுகளை கண்டுகொள்ளாத அதிமுக நிர்வாகிகள் சிலர், தங்களுடைய பதவியை காத்துக்கொள்ள ஒருவர் பின் ஒருவராக போயஸ் தோட்டம் சென்று சசிகலாவின் காலில் விழத் தொடங்கினர். எங்கே நாம் போகவில்லை என்றால் பொல்லாப்பு ஆகிவிடுமோ என்று விரும்பாமலும் சென்றவர்களும் பலபேர். முடிவாக ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகளாக இருந்த அவரது தோழி சசிகலா பொறுப்பேற்றால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்று கூறி ஒருவழியாக சசிகலா அதிமுக பொதுசெயலாளர் ஆகிவிட்டார்.
அவர் பதவியேற்க வரும்போது அதிமுக தொண்டர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தன்னுடைய தோற்றத்தில் ஜெயலலிதாவைப்போல் மாற்றியிருந்தார் என்றே அனைவரும் கூறினார்.
ஆனால் எனத்தான் நடை உடை பாவனைகளை ஜெயலலிதா போல் மாற்றிகொண்டாலும் அவரை ஜெயலலிதாவிற்கு இணையாக வைத்துப் பார்க்க பெரும்பான்மையான தொண்டர்கள் விரும்பவில்லை.
இதனால் கோபமுற்ற அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா பொறுப்பேற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் இதுவரை தீபா தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதியாக கூறவில்லை. இப்போது நான் எந்த முடிவும் எடுக்க வில்லை. புத்தாண்டில் அறிவிப்பேன் பொறுத்திருங்கள் என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில் தி.நகரில் உள்ள தீபா வீட்டிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் தினமும் குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் அணியணியாக வருகிறார்கள். அவர்கள் தீபாவை கட்சி பொறுப்புக்கு வரும்படி வலியுறுத்தி வருகிறார்கள். பதில் எதும் சொல்லாத தீபா தொண்டர்களை பார்த்து கும்பிட்டு பொறுமையாக இருக்கும்படி கூறுகிறார். மேலும் தொண்டர்கள் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் தீபாவை வற்புறுத்துகிறார்கள்.
தீபா ஆர்.கே.நகர் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை ஜெயிக்க வைத்து அதிமுக தொண்டர்களின் ஆதரவு தீபாவுக்கே என்பதை அதிமுக நிர்வாகிகளுக்கும், மற்ற கழக முன்னோடிகளுக்கும் தெரிவிப்போம் என்று தெரிவிகின்றனர்.