திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சலவையாளர், நாவிதர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 10 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் க.சித்தி அத்திய முனவரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சலவையாளர், நாவிதர் பணிகளில் காலியாக உள்ள தலா 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப் பணிகளில் சேர விரும்புவோர் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 18 வயது முதல் 35 வயதுக்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 18 முதல் 32 வயதுக்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இனசுழற்சி முறை பின்பற்றப்படும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

முதல்வர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி-11 என்ற முகவரிக்கு ஜனவரி 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். அதன்பின்பு கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என  குறிப்பிடப்பட்டுள்ளது.