தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க ஆமணக்கு

தாவர விளக்கம்

மூலிகையின் பெயர் : 

ஆமணக்கு

ஆங்கிலப் பெயர்: 

Ricinus communis

தாவரக்குடும்பம்: 

Euphorbiaceae

அடையாளம்: 

ஆமணக்கு (Ricinus communis)   தமிழகமெங்கும் காணக்கூடிய தாவரம், விவசாய விளை நிலங்களின் ஓரங்கள், தோட்டந்துரப்புகள், தரிசு நிலங்கள், மணல் பிரதேசங்கள், வளம் குறைந்த பகுதிகளிலும் நன்றாக வளரகூடியது. ஆமணக்கு பெருஞ்செடிகளாகவோ அல்லது குறுமரங்களாகவோ வளரும் இயல்புடையது. ஆமணக்கு நம் மித வெப்பப் பகுதிகளில் சுமார் 1-3 மீட்டர் வரையே வளரக்கூடிய ஓராண்டுத் தாவரமாக உள்ளது அனால் வெப்பவலயப் பகுதிகளில் 10-13 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடிய மரமாகும். தண்டை சுற்றி இதன் இலைகள் கைவடிவில் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். சில வெண்ணிறத் தண்டையும் சில செடிகள் செந்நிற தண்டையும் கொண்டிருக்கும். தண்டுகள் எளிதில் உடயகூடியது. இதன் காய்கள் கொத்து கொத்தாக இருக்கும் காய்களை சுற்றி முட்கள் காணப்படும். பச்சை நிறக் காய்கள் காய்ந்து வெளிறிய வெள்ளை நிறத்திற்கு மாறி வெடிக்கும்போது விதைகள் வெளியேறும். ஆமணக்கு செடியின் விதை கொட்டை முத்து  எனவும் அழைக்கப்ப்படுகிறது. இதன் விதைகளில் இருந்து விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது. விளக்கெண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. குளிர்ச்சி தரக் கூடியது.

ஆமணக்கில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செல்வாமணக்கு ஆகிய மூன்று முக்கிய வகைகள் உள்ளன. சிற்றாமணக்கு சிறிய அளவுள்ள கொட்டையும், பேராமணக்கு பெரிய அளவுள்ள கொட்டையும், செல்வாமணக்கு சிவப்பான விதையும் கொண்டது. சிற்றாமணக்கு, பேராமணக்கு இரண்டு வகைகளுக்கும் மருத்துவப் பயன் ஒன்றுதான் என்பதாகவே பெரும்பாலான மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவக் குணங்கள்: 

இதன் இலையில் நெய்தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் கட்டிவர பால்சுரப்பு மிகும். இல்லையென்றால் விளகெண்ணையை மார்பகத்தில் தடவிவந்தாலும் பால் சுரப்பு மிகும். மார்பு காம்புகளில் உண்டாகும் புண்களுக்கு இந்த எண்ணையை மேல் பூச்சாக பூச நல்ல பலன் கிடைக்கும்.

இலையை பொடிப்பொடியாய் அறிந்து விளக்கெண்ணை விட்டு வதக்கி கட்டிவர மூலக்கடுப்பு, கீல்வாதம், வாதவீகம் தீரும்.

சூட்டினால் வரும் வயிற்றுக்கடுப்பால் வயிறு இழுத்துப் பிடித்து வலிக்கும். இந்த வலிக்கு ஆமணக்கு இலையை விளக்கெண்ணையில் வதக்கி தொப்புளில் கட்ட வலி தீரும். உடலில் பித்தம் அதிகமாகி சூடாகும்போது சூட்டை குறைக்க உள்ளங்கையில் விளகெண்ணையை தடவிக்கொண்டு படுக்கலாம்.

ஆமணக்கு இலையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையை சேர்த்து நன்கு வெண்ணை பதத்திற்கு அரைத்து 30 கிராம் காலையில் மட்டும் மூண்று தினங்களுக்கு கொடுத்து நான்காம் நாள் பேதிக்கு கொடுக்க காமாலை கட்டுப்படும். கண்டிப்பாக பத்தியம் இருக்கவேண்டும்.

பல்வலி, ஈறுகளில்  வலி, ஈறுகளில் இரத்தம் கசிதல் போன்றவை இருந்தால் நான்கு சுத்தம் செய்த ஆமணக்கு இலையையும் குச்சியையும் மென்று தின்ன பல் மற்றும் ஈறுகள் பலமடைந்து குணம்பெறலாம்.

விதையை தோல்நீக்கி அரைத்து கட்டிகளின் மீது பூச கட்டி பழுத்து உடையும்.

ஆமணக்கு எண்ணெய் இரண்டு வகைகளில் பிரித்து எடுக்கப்படுகிறது. ஒன்று பச்சை எண்ணெய் என்றும் மற்றொன்று ஊற்றினை என்றும் அழைக்கப்படுகிறது.

விதையை உலர்த்தி தோல்நீக்கி செக்கில் பிழிந்து எடுக்கும் முறையில் பெறப்படும் எண்ணெய் பச்சை எண்ணெய் என்றும்,  ஒருபங்கு தொல்நீக்கப்பட்ட விதையை இடித்து அதனுடன் நான்கு பங்கு இளநீரை சேர்த்து கொதிக்கவைக்க. விதையில் இருந்து எண்ணெய் வெளியேறி மேலே வரும். இந்த எண்ணையை அகப்பைகொண்டு எடுத்து வெய்யிலில் வைக்க எண்ணையில் கலந்துள்ள நீர் அனைத்தும் வெளியேறும். இவ்வாறு பெறப்படும் எண்ணெய் ஊற்றினை என்று அழைக்கபடுகிறது.

பச்சை என்னையைவிட ஊற்றினைக்கு அதிக மருத்துவகுணம் வாய்ந்தது மேலும் பாதுகாப்பானது.

விளகெண்ணையை  8 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 சொட்டுகளும் பெரியவர்கள்  10 சொட்டுக்களும் காலையும் மாலையும் உள்ளுக்கு எடுத்து வர வாதம்,  நரம்புவலி, தசைவலி, ஜீரனக்கோலாறுகள் நீங்கும்.

கண் இமைகளில் குறைவான முடிகளை கொண்டவர்கள் தினமும் இரவு தூங்க போவதிற்கு முன் முகத்தை நான்கு சுத்தம் செய்து விளகெண்ணையை ஆலிவ் எண்ணையுடன் சேர்த்து இமைகளில் பூச இமைகள் போலிவாவதுடன் முடிகளும் அதிகரிக்கும், என்னை இமைகளில் பூசும்போது அது மயிர்கால்களை அடைவது முக்கியம்.

விளகெண்ணை, நல்லெண்ணெய் , பசுநெய் ஆகிய சேர்ந்த முக்கூட்டு எண்ணெய் வாத பித்த கப நோய்களுக்கு தீர்வளிக்கும்,

முக்கூட்டு எண்ணெய் விகிதாச்சாரம் (Ratio’s):

விளக்கெண்ணெய் : நல்லெண்ணெய் : பசு நெய்

வாத நோயாளிகளுக்கு – 3 : 2 : 1

பித்த நோயாளிகளுக்கு – 2 : 1 : 3

கப நோயாளிகளுக்கு – 1 : 3 : 2

நல்ல தரமான எண்ணெய் பழுப்பு கலந்த வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடனும் தரம் குறைந்த எண்ணெய் மஞ்சள் நிறமாகவும் வெகுட்டல் மணமுடயதாகவும் இருக்கும். உள்ளுக்கு சாப்பிட நல்ல தரமான எண்ணையை பயன்படுத்த வேண்டும்.

  எச்சரிக்கை :- ஆமணக்கு விதையை பச்சையாகவோ, காய்ந்த நிலையிலோ அப்படியே சாப்பிடுவது, இது நச்சுத்தன்மை வாய்ந்தது.