தலைமை தேர்தல் ஆணையர் 5 மாநில தேர்தல் தேதியை இன்று அறிவித்தார்.

தலைமை தேர்தல் ஆணையர் உத்தர்பிரதேஷ், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை இன்று அறிவித்தார். இதில் பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும். மணிப்பூரில் 2-கட்டமாகவும், உத்தர்பிரதேஷ் மாநிலத்தில் 7 கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

 •  கோவா மணிப்பூர் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியின் பதவிகாலம் மார்ச் 18-டன் முடிவடைகிறது, அதே போல் உத்தரகாண்ட் சட்டசபைக்கு மார்ச் 26-லும் உத்தர்பிரதேஷ் மாநிலத்தின் சட்ட சபைக்கு மார்ச் 27-லும் முடிவடைகிறது .
 • மொத்தமுள்ள 619/690 இடங்களில் – 133 இடங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் 23 இடங்கள் மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 • லட்சக்கணக்கான போலி வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
 • திருததப்பட்ட வாக்காளர் பட்டியல் கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய  மாநிலங்களுக்கு ஜனவரி  5–ஆம் தேதியும் மணிப்பூர் மற்றும் உத்தர்பிரதேஷ் மாநிலங்களுக்கு  ஜனவரி 12–ஆம் தேதியும், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு  ஜனவரி 10–ஆம் தேதியும்  வெளியிடப்படும்.
 • தேர்தல் ஆணையம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டுக்களை விநியோகம் செய்யும்.
 • தேர்தல் தொடர்பான விளக்க சீட்டும் அனைவருக்கும் வழங்கப்படும் அதில் வாக்களிக்க தேவையான அணைத்து விவரங்களும் அச்சிடப்பட்டிருக்கும்.
 • 1.85 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும்.
 • 5 மாநிலங்களில் மொத்தம் 16 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
 • வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கும் இடத்தை சுற்றி அமைக்கப்படும் தடுப்பு மேலும் 1அடி உயர்த்தப்படும்.
 • மின்னணு வாக்காளர் எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
 • மின்னணு எந்திரங்களில்  நோட்டா சேர்க்கப்படும்.
 •  சில வாக்குச்சாவடிகளில் Voter-Verified Paper Audit Trail or VVPAT. அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
 • இந்தமுறை போட்டியிடும் வேட்பாளர்கள் விண்ணப்ப படிவத்தில்  தங்களுடய புகைப்படங்களை இணைக்க வேண்டும்.
 • இந்த அறிவிப்பின் மூலம் தேர்தல் தடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றது.
 • வேட்பாளர்கள் கூம்பு ஒலிபெருகிகளையும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களையும் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது.
 • தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறும்.
 • உள்ளூர் காவல் துறையுடன் மத்திய ரிசர்வ் போலிசும் பயன்படுத்தப்படும்.
 • வாக்காளர்கள் தேர்தல் செலவுகளுக்கு வங்கிகளில் கணக்குகளை தொடங்கி பயன்படுத்தவேண்டும்.
 • 20,000 ரூபாய்க்கு மேற்பட்ட செலவுகளை இந்த கணக்குகள் மூல செலவிட வேண்டும்.
 • 20,000 ரூபாய்க்கு மேற்பட்ட நன்கொடைகளை வங்கி காசோலை மூலமே பெறவேண்டும்.
 • கட்சிகள் தங்கள் தேர்தல் செலவுகளை தேர்தல் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள்  தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும்.
 • கட்சிகளுக்கு சொந்தமான தொலைகாட்சிகளில் வெளியாகும் அக்கட்சி சம்பந்தமான அறிவிப்புகளும்  தேர்தல் செலவுகளில் சேர்க்கப்படும்.
 • வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா போன்ற தவறான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
 • அணைத்து மாநிலங்களுக்கு மார்ச் 11, 2017 அன்று வாகு எண்ணிக்கை நடைபெறும்.