தமிழிசை சௌந்தரராஜன் புத்தாண்டு வாழ்த்து

TN Images: 

ஆங்கிலப் புத்தாண்டு  பிறந்ததையொட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச்செயளார்  தமிழிசை சௌந்தரராஜன்  வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்

"நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் துணிச்சலான நடவடிக்கைகளால், கருப்பு ஒழிந்து, கருமை அகன்று, வெள்ளையும்

வெளிச்சமும், பணத்திலும் மனதிலும், ஒளிரும் காலம் இந்த புத்தாண்டில் கனிந்து வருகிறது. விவசாயிகளின் வாழ்க்கை உதிருவதாக இல்லாமல், மலர்வதாக இருக்கும் படியாக இந்தப் புத்தாண்டு மலர்ந்து வர வேண்டும் என்பது நம் ஆசை.அனைத்து துன்பங்களும் அகன்று, அனைருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் ஆண்டாக இந்த ஆங்கிலப் புத்தாண்டு மலர வேண்டும், இந்தியா வளர வேண்டும், என்றும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிபிட்டுள்ளார்.