தன்னம்பிக்கை தொடர் - அனுபவமே ஆசான்

இத்தொடரை எழுத தொடங்கும் முன்னர், எனக்கு கிடைத்த அனுபவங்களை பட்டியலிட்டு பார்க்கிறேன், என்னை சீர் திருத்தி கொள்ள இன்னுமொரு வாய்ப்பு கொடுத்த என்னுடைய மடைமைக்கு வந்தனங்கள்.

ஆனால் அவற்றையெல்லாம் இங்கே பட்டியலிடமுடியாதே. சொல்ல வந்த விசயங்களை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். அதற்கு வேறொரு கணத்தில், மற்றுமோர் களத்தில் விரிவாக பேசலாம்.

நம்மை நாமே சரி செய்து கொள்ள நமக்கு கிடைக்கும் அனுபவமே மூலதனம். எவராயினும் தன்னை திருத்தி கொள்ளவே விரும்புவர். அப்படி தங்களை மாற்றி கொள்ள உதவும் மிகப் பெரிய பொக்கிஷமே அவர்களின் அனுபவமேயன்றி வேறில்லை.

Experience makes a man perfect - where as experience comes from a mistake : All men make mistakes, but only wise men learn from their mistakes. - Winston Churchill Anyone who has never made a mistake has never tried anything new. - Albert Einstein

மேலே கூறப்பட்ட அனைத்துமே அனுபவசாலிகள் அனுபவித்து  உதிர்த்த முத்துக்களே. எல்லாருமே ஒரு வகையில் அவர்களின் அனுபவங்களை ஏதோ ஒரு வகையில் நம்மிடம் சேர்த்துவிட்டு தான் சென்றுள்ளார்கள். அவர்களின் அனுபவங்களை ரத்தின சுருக்கமாக சொல்லி விட்டு போயுள்ளார்கள், ஒரு வகையில் நமக்கு உதவி செய்து விட்டு தான் சென்றுள்ளார்கள்.

உதாரணத்திற்கு உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோ என்ன செய்தார் தெரியுமா.? அவரது வீட்டில் பூனைகள் வளர்த்து வந்தார். அவற்றில் சிறிய குட்டிகளும் உண்டு பெரிய பூனைகளும் உண்டு.  அவைகள் இருப்பதற்கு ஒரு பெட்டியையும் தயார் செய்து வைத்தார்.  அப்பெட்டியில் அவைகள்  வந்து போவதற்கு எளிதாக இருக்க  பெரிய பூனைகளுக்கு  ஒரு பெரிய ஓட்டையையும், சின்ன குட்டிகளுக்கு சிறிய ஓட்டையையும் போட்டு வைத்தார். 

அருட்திரு  ராமலிங்க அடிகளார் சொல்வதைப் போல்  பசித்திரு,  தனித்திரு,  விழித்திரு. சுறு சுறுப்பு உள்ளவர்களிடம் பசி இருக்கும்,  படித்தவற்றை செயல்படுத்த தனித்திருக்க வேண்டும். எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அதற்கேற்ற பொறுமையும் மிக அவசியம்.  தாம்ஸ் ஆல்வா எடிசன்  தனது கற்றலின் போது எவ்வளவோ தவறுகளை செய்தார். அதற்கு அவர் கொடுத்த விளக்கம் எப்படி செய்ய கூடாது என்பதை கற்று கொண்டேன் என மிக சாதாரணமாக சொன்னார்.

 

மீண்டும் நாளை