ஜாம்பவான்களின் 20/20

துபாய், ஜுன்,3

முன்னால்  கிரிக்கெட் ஜாம்பவான்களான இந்தியாவின் சச்சின் தெண்டுல்கரும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னேவும் இணைந்து ஓய்வுபெற்ற வீரர்களை கொண்ட  புதியதாக 20 ஓவர் கிரிக்கெட் லீக்கை அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்தில் தொடங்கி நடத்த திட்டமிட்டுள்ளனர்.  முக்கியமான அமெரிக்க நகரங்கலான சிகாகோ, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் போட்டியை நடத்தமுடிவு செய்துள்ளனர்.

இந்த போட்டியில் விளையாட வைக்க பிரெட்லீ, பிளின்டாப், காலிஸ், கில்கிறிஸ்ட், சவுரவ் கங்குலி, மஹேலா ஜெயவர்த்தனே உள்பட 28 முன்னாள் வீரர்களை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடக்கிறது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC.)  தலைமை செயல் அதிகாரியான டேவ் ரிச்சர்ட்சனை இன்று துபாயில் சந்தித்த தெண்டுல்கரும் வார்னேவும்  போட்டி தொடர்பான புளு பிரின்டை சமர்ப்பித்தனர். இதனை அந்த இரு முன்னாள் ஜாம்பவான்களும் தங்கள் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். இதுபோல தனியார் நடத்தும் கிரிக்கெட் போட்டிகளை கட்டுப்படுத்தும் உரிமை ICC-க்கு இல்லை என்பதால், என்ன நடக்குது என தெரியாமல் கிரிகெட் உலகம் குழம்பி போய் உள்ளது.

டெண்டுல்கர் ட்விட்டர் செய்தி.

 “Looking forward to the challenge @ShaneWarne. GAME ON!! It is #SachinversusWarne!!!,” 

வார்னே ட்விட்டர் செய்தி

“Exciting meeting today with the #ICC Game on #SachinversusWarne !!!”.