ஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின்

மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:

இந்த மண்ணினுடைய பெருமையை நிலைநாட்டவும், நமது கலாசாரத்தையும் நமது கவுரவத்தையும் பாதுகாக்கவே  தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் உங்களோடு நானும் கலந்துகொண்டு காணக்கூடிய வாய்பை பெறுவேன் என்று நம்பியிருந்தேன் ஆனால் அதற்குரிய எந்த நடவடிக்கையும் துவங்கவில்லை என்பது வருத்தமடைய வைத்துள்ளது.

இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு களம் அமைய இந்த போராட்டம் பயன்படும்.

வீரவிளையாட்டை நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும், அதை நடத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இங்குள்ள பா.ஜ., அமைச்சர்கள், தலைவர்கள் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என வாக்குறுதிகள் மட்டும் அளித்து கொண்டிருகிரார்கள். வாக்குறுதி என்பது  நிறைவேற்றப்படும் என்ற உணர்வோடு மட்டுமே எடுத்து சொல்லவேண்டும்.

வாக்குறுதி என்றால் நான் நமக்கு நாமே பயணத்தின்போது இங்கே வந்து பேசுகையில் மத்திய அரசும் மாநில அரசும் ஜல்லிக்கட்டு நடத்த அவன செய்யவில்லை என்றால் இங்கே ஆர்பாட்டம் நடத்துவோம் என்று சொன்னோம், அத்தகு பின்னல் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவோம் என்று சொன்னோம் ஆனால் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் கலைஞரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம் நீங்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று கேட்டுகொண்டார். எனவே கலைஞர் போராட்டத்தை ஒத்திவைத்தார்கள். ஆனால் அவர் சொன்னதுபோல் மத்திய அரசு அனுமதியை தரவில்லை.

அனால் இந்த நேரத்தில் திமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு நடத்த ஆவன செய்திருப்போம். 2010-ல் உச்சநீதிமன்றத்தில் தடைசெய்யப்பட்டபோது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான அனுமதி உச்சநீதிமன்றத்தில் பெறப்பட்டு நடத்தப்பட்டது என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.

மேலும் ஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் என்றார்.