ஜன் தன் கணக்கில் ரூ.100 கோடி டெபாசிட் பதில் தராத வங்கி அதிகாரிகள்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் ஷிலிதர் சிங் அங்குள்ள வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். ஷிலிதர் சிங்குடைய மனைவி ஷீதால் யாதவ் அவரும்  அதே தொழிற்சாலையில் பேக்கிங் துறையில் பணியாற்றி வருகிறார் இருவரும் குறைந்த வருமானத்தில் பணியாற்றி வரும் சாதாரண ஊழியர்கள்.

சிலநாட்களுக்கு முன்பு ஷீதால் யாதவ் தன்னுடைய ஜன் தன் வங்கி கணக்கில் ரூ. 100 கோடி ரூபாயை வைப்பு வைத்துள்ளதைப்  பார்த்து அதிர்ச்சியடைந்து அதைப்பற்றி வங்கி அதிகாரிகளை நாடி விளக்கம் கேட்டுள்ளார். வங்கி அதிகாரிகள் அவருக்கு  பதிலளிக்காமல் பிறகு வாருங்கள் என்று தட்டி கழித்து உள்ளனர். இதனால் பயந்து போன அப்பெண் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீரட்ட்  சார்தா சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஜன் தன் வங்கி கணக்கை பராமரிப்பதாக கூறியுள்ள ஷீதால், கடந்த 18-ம் தேதி ATM சென்று பணம் எடுத்தபிறகு என்னுடைய கணக்கில் மீதம் ரூ. 99,99,99,394 இருப்பதாக தகவல் வந்ததாக குறிபிட்டுள்ளார்,  அதனை நம்ப முடியாமல் அருகே இருந்தவரிடம் காட்டி உறுதி செய்துள்ளார்.

 பின்னர் அருகிலுள்ள வேறொரு ATM (Yes Bank)  ஏடிஎம்மிற்கு சென்று பார்க்க. அங்கும் அதே தொகையே கணக்கில் காட்டியுள்ளது.

இதனையடுத்து  தன்னுடைய வங்கி கிளைக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் உரிய பதில் கூறாமல்  சிலநாட்கள் கழித்து வாருங்கள் என தட்டி கழித்து உள்ளனர். பின்னர் வங்கிக்கு சென்ற போதும் இதே பதிலே கிடைத்து உள்ளது. ஷீதால் யாதவின் கணவர்.

வங்கி அதிகாரிகள் சரியாக பதிலளிக்காத காரணத்தினால், நொந்துபோன இத் தம்பதிகள் இவ்விஷயத்தை நண்பர்களிடம் பகிர அவர்கள்  பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கு புகார் அனுப்ப உதவிசெய்துள்ளனர். 

பணவரவு வைப்புக்கு ஆதாரமாக ATM இயந்திரத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற ரசீது மற்றும் பாஸ்புக்கை நகல் எடுத்து அனுப்பியுள்ளனர்.

மூன்று லட்சத்துக்குமேல் வரவுவைத்தால் கேள்விகளை கேட்டு துளைக்கும் அதிகாரிகள். 100 கோடி பணத்தை எப்படி வரவு வைத்தார்கள் என்பது அப்பகுதி மக்களிடையே எழும்பியுள்ள கேள்வியாகும்.