ஜனவரி 1 முதல் ஏ.டி.எம்.-மில் ரூ.4,500 எடுக்கலாம்.

ஜனவரி 1 முதல்  ஏ.டி.எம்.,களில் ரூ.4,500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, நவ., 8ல் அறிவிக்கப்பட்டதிலிருந்து  அவ்வபோது, வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு, கட்டுபாடுகள் மாறிகொண்டே வந்தன. முதலில் ஏ.டி.எம்.,களிலிருந்து, நாளொன்றுக்கு 2000 ரூபாய் எடுக்க அனுமதிக்கப்பட்டு பின்பு அது  அதிகபட்சம், 2,500 ரூபாய் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. வங்கிகிலளைகளில் இருந்து  வாரத்துக்கு அதிகபட்சம், 24 ஆயிரம் ரூபாய் வரை அனுமதிக்கப்பட்டது. மதிய அரசு அறிவித்திருந்த, 50 நாட்கள் கெடு நேற்றுடன்  முடிவடைந்தது. இநிலையில் கட்டுப்பாடில் மாற்றம் வருமா என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருகின்றனர்.

இன்று அதிகாலை ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி  ஜனவரி 1ம் தேதி  முதல் ஏ.டி.எம்.,களில் ரூ.4,500 எடுக்கலாம் என  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து ஏ.டி.எம்.,களில் பணமெடுக்கும் வரம்பு ரூ.2,500 ஆக இருந்து ரூ.4,500 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் வாரத்துக்கு அதிகபட்சம், 24 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம் என்று விதிக்கப்பட்ட வரம்பு தளர்த்தப்படவில்லை. அதன் சுற்றறிக்கையை பார்க்கையில் ஏ.டி.எம்.,களில்  பெரும்பாலும் உயர் மதிப்புகொண்ட  2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் தான் கிடைக்கும் என்று தெரிகிறது.