செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம் அல்லது சிறை

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.

நவம்பர் மாதம் 8-ஆம் தேதியிலிருந்து செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்காக  காலஅவகாசம் டிசம்பர் 30–ந் தேதிவரை கொடுக்கப்பட்டது, அந்த அவகாசம் வரும் வெள்ளிகிழமையோடு முடிகிறது. அதன்பின்னர் மார்ச் 31–ந் தேதி வரை ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்வதற்கான கால அவகாசமும் இருக்கிறது. அதற்கு பிறகும்  செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம் விதிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு இன்று கொண்டுவந்துள்ளது.

இச்சட்டத்தின்படி  இன்று நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் மார்ச் 31–ந் தேதிக்கு பிறகு செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் தலா 10 எண்ணிக்கைக்கு மேல் வைத்திருந்தால் அபராதம்  அல்லது 4  ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கபடும் என அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு ஒப்புதல் அளிக்கபட்டு உள்ளது.

இச்சட்டதிற்கும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது