செட்டிநாடு வத்தல் குழம்பு

தேவையான பொருட்கள்

 • சின்ன வெங்காயம் – 200 கிராம்
 • பூண்டு – 100 கிராம்
 • வத்தல் - (மணத்தக்காளி அல்லது சுண்டைக்காய் வத்தல்) – தேவையான அளவு
 • தக்காளி – 2
 • புளி –  எலுமிச்சையளவு
 • சாம்பார் பொடி  – 4  தேக்கரண்டி
 • உப்பு – தேவைக்கு
 • மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

 • நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
 • கடுகு  – 1 /2 தேக்கரண்டி
 • உளுந்தம் பருப்பு – 1 /2 தேக்கரண்டி
 • சீரகம்  – 1 /4 தேக்கரண்டி
 • மிளகு – 1 /4 தேக்கரண்டி
 • வெந்தயம் – 1 /4 தேக்கரண்டி
 • பெருங்காயம்  – சிறிது
 • கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:

உப்பு, புளி இரண்டையும் ஊறவைத்து, நன்றாகப் பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைச் சேர்த்து சாறு எடுத்துக் கொள்ளவும். இப்படி எடுத்த சாறு, மூன்று கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

ஒரு வாணலியில் நல்லெண்ணையை விட்டு சூடானதும் முதலில் வற்றலை வறுத்துக் கொள்ளவும், பின்னர் கடுகு போட்டு பொரியவிடவும். கடுகு வெடித்தவுடன் தாளிப்புக்கு தேவையான மற்ற பொருட்களையும் சேர்த்து தாளிக்கவும் இப்பொழுது  அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொள்ளவும். இல்லையெனில், வெந்தயம் கருகி கசக்கும்). வெந்தயம் இலேசாக சிவந்தவுடன், வெங்காயம், தக்காளி, பூண்டையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் கறிவேப்பிலையையும் போட்டு சிறிது வதக்கி,  அதில் அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி (மல்லிவிதை, கடலைப்பருப்ப்பு, மிள்காய்வத்தல்[2] இவற்றை வறுத்து பொடி செய்து பயன்படுத்தினால் சிறப்பு) ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி விடவும்.

பின்னர் புளித்தண்ணீரைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை அல்லது என்னை பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.  கமகமக்கும்

குறிப்பு:  வத்தகுழம்பு வகைகளுக்கு "கருவடாம்" எனப்படும் வடகத்தை கடுகுடன் சேர்த்து தாளிக்க பயன்படுத்தினால் சுவை மிக அருமையாக இருக்கும்.